புதன், மார்ச் 23, 2011

தேர்தலில் வாக்களிப்பீர்களா அன்பர்களே!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ‘ஒரு’ உருப்படியான திட்டம் கூட இல்லை என்பது பகுத்தறிவுள்ள எவனுக்கும் தெரியும்.

சமீபத்தில் ஒருவரை சந்தித்தேன். நன்கு படித்தவர். நல்ல தொழிலில் இருக்கிறார்.   அவருடன் (அவர் தி.மு.க அனுதாபி) பேசுகையில், அவரும் நல்ல திட்டம் எதுவும் இல்லை என ஒப்புக்கொண்டார், இருப்பினும் நாட்டுக்கு நல்லதோ கெட்டதோ, தலைவர் மிகவும் அறிவாற்றலோடு ஏழை மக்களுக்கு(ஓட்டு போடுபவர்கள் அவர்கள்தானே) நல்ல திட்டங்கள் போட்டுள்ளார், பல இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார் என்று வெகுவாக பாராட்டிக் கூறினார்.

மேலும் அவர், இன்று மக்கள் தெளிவாக உள்ளார்கள், ஒன்று ஓட்டு போடும் முன் ஓட்டுக்கு பணம் பெறுவது, இரண்டாவது வெற்றி பெற்றபின் இலவசங்கள் பெறுவது.... இதை கடந்த முறை வெற்றிகரமாக்கிய தலைவர் சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார், எனவே வெற்றி தி.மு.க.விற்கு உறுதி என்று கூறுகிறார்...

பகுத்தறிவுள்ளவர்கள், படித்தவர்கள், “நாம் செலுத்தும் வரிப்பணத்தினால் ஆட்சியை இப்படி சீரழிக்கிறார்களே, மக்களை ஏமாற்றுகிறார்களே” என தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் இப்படி பேசலாமா...

தேர்தல் அறிக்கையை சிறிது அலசினால்...

• இன்று தமிழ்நாட்டில் குறைந்தது இரண்டு மணிநேரம் முதல் மூன்று மணிநேரம் மின்சாராம் தடை - இதை நிவர்த்தி செய்ய ஒரு தொலைநோக்கு திட்டமும் இல்லை. இந்த நிலை நீடித்தால் சிறுது நாளில் இரண்டு அல்லது மூன்று மணிநேரமே மின்சாரம் வழங்கும் நிலைதான் வரும்.

• வேலை வாய்ப்பைப் பெருக்கி நாட்டில் வேலையில்லா பிரச்சனை தீர உருப்படியான ஒரு திட்டமும் இல்லை இந்த அறிக்கையில்...

• ஆட்டுக்கும் மாட்டுக்கும் பயன்படும், வெளிமாநிலத்திற்கு கடத்தப்படும், ஒரு ரூபாய் அரிசி 35கிலோ இலவச அரிசியாக மாறவேண்டுமா?

• நஷ்டத்தில் இருக்கும் போக்குவரத்து, புதிய சொகுசு பேருந்துகளால் குறைந்தது 5,7,10 ரூபாய் பயணச்சீட்டு என மாறி பொதுமக்களை கவலையடைய வைத்த போக்குவரத்து மேலும் வலுவிழக்க இலவச பஸ் பாஸ் தேவையா? நல்ல திட்டம் தான் முதலில் வலுவிழந்த துறையைச் சீர்படுத்த திட்டம் வேண்டுமல்லவா... வருமானத்தைக் கூட்ட பேருந்துக் கட்டணத்தை கூட்ட வேண்டும், ஏற்கனவே மலையெனயுள்ள விலைவாசி மேலும் இமையமாக இதுவே காரணமாகும்.

• ஊழல் இல்லாமல் ஆட்சியில்லை என இந்திய அரசியலையே புரட்டி போட்ட ஒரு தலைவர்(?) இலவசம் இல்லாமல் இன்று ஆட்சியில்லை என்றும் ஒரு புரட்சியை (ஆம் புரட்சிதான் பின்னாளில் ஒரு மக்கள் புரட்சி வெடிக்க இந்த இலவசம் காரணமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை) உருவாக்கிவிட்டார். விளைவு மீண்டும் இலவசங்கள் கிரைண்டர் அல்லது மிக்ஸி என்று... ஏழைகள் இருக்கும் வரை இலவசம் (ஏழைகள் ஏழையாக மாற்றும் இந்த இலவசம் என்பதை நாம் அறிவோம்) என்று சொல்லி, ஏழைகளை வீட்டில் இலவச டி.வி. பார்த்து ஒரு ரூபாய் அரிசியை இலவச கிரைண்டர் மிக்ஸி மூலம் சமையல் செய்து சாப்பிட அரசே பழக்கினால் மக்களிடம் வேலை செய்யும் பழக்கமே மங்கிவிடுமோ என தோன்றுகிறது... என்னாகுமோ அவர்களின் எதிர்கால நிலை.... (எவ்வளவு கூலி கொடுத்தாலும், வேலை செய்ய ஆளில்லை பல ஊர்களில்...) அப்படியே அவன் வேலை செய்தாலும் அவன் கூலியில் முக்கால் பங்கு போய்விடும் பண்டிகை மற்றுமல்லாது வருடம் முழுக்க டார்கெட் போடும் டாஸ்மாக்கிற்கு... உண்மையிலேயே அவன் கதி ஆரோகதிதான்... எவன் வீட்டு காசில் இலவசம்... பிச்சை போடுவதுபோல் இலவசமும் ஓட்டுக்கு காசும் கொடுத்து ஒரு குடும்பத்திற்கு ஒரு சிலபேர்க்கு பல ஆயிரம் (லட்சம்) கோடிகள் போய்ச் சேர வேண்டுமா...? விலைவாசி உயர்வை குறைக்க எந்த திட்டமும் இல்லாத அறிக்கையில், மின்சாரம் தடையின்றி வழங்க எந்த திட்டமும் இல்லாத அறிக்கையில் இலவசங்கள் என்று சொல்லி இனியும் ஏழைகளை ஏமாற்ற வேண்டுமா...?

• அரசுக் கல்லூரிகளில் ஆதி திராவிட மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவார்களாம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூன்று இலவச சீருடைகள் – ஆனால் அரசுப்பள்ளி கல்லூரி நிலைமை அனைவரும் அறிவோம், தரமான கல்வி இல்லை இதற்கு அர்த்தம் தரமான ஆசிரியர்கள் அல்லது போதுமான ஆசிரியர்கள் இல்லை... இதனைப் போக்க திட்டம் கொடுக்காமல் இலவசம் சீருடை அணிந்து, கணினி வைத்து அவர்கள் என்ன செய்வது... இரண்டாவது தனியார் பள்ளி கல்லூரி கட்டணங்களை இன்றுவரை நெறிப்படுத்தவில்லை... நெறிப்படுத்த முடியாது ஏனென்றால் இன்று அனைத்து பள்ளி கல்லூரி நுறுவனங்களும் தி.மு.க. தலைவர்களின் பினாமியுடையது அல்லவா...

• இன்றுவரை தீராத தமிழ்நாட்டு பிரச்சனைகள் காவிரி, பாலாறு, பெரியாறு நதிநீர் பிரச்சனைகள்... இதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சிறு முயற்ச்சியும் எடுக்காத அரசு, இன்று தேர்தல் அறிக்கையில் நதிகளை தேசியமயமாக்க மத்திய அரசை கோருவார்களாம்... (தலைவா எப்படி மடல்கள் எழுதியா? :-))

• இலங்கை அரசின் மீனவர்கள் படுகொலைகளுக்கு சிறிதும் மெனக்கெடாது கடிதங்கள் எழுதியவர் இன்று தேர்தல் என்றதும் மீனவர்கள் ஓட்டுக்குளைப் பெற டீசல் மானியம், காப்பீடு, மீனவர்கள் படுகொலைகளைத் தடுக்க மத்தியரசைக் கோருதல் என அடுக்கடுக்காக ஏமாற்று வாக்குறிதிகளை அள்ளிவிட்டுள்ளார்... உயிர்களை இழந்த மக்கள், மீனவ நண்பர்கள் இவரின் கபட நாடகத்தை அறியாமலில்லை...

• ஏற்கனவே அனைத்து அமைச்சர்களும் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகெட்டி பறந்து கொண்டிருக்கும் வேளையில், ஒரு வீடு கட்ட அவனவன் படும் பாடு, செங்கல் விலை ஒன்பது பத்து, மணல் விலை கின்னஸ் புத்தகத்திற்கு போய் விடும் போலும் ஒரு லாரி மண் இருபது ஆயிரத்தை தொட்டு விட்டது... இவர்கள் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு எழுபத்தைதை ஒரு லட்சம் ரூபாய் ஆக்குகிறார்களாம்.... ஐயகோ... ஒரு லட்சம் பேர் பயனடைய (மீதி காசை அவன் எப்படி ரெடி செய்வானோ), ஆறு கோடி பேர் கஸ்டப்படுனுமா? இது ஒரு திட்டமா? (ஏழை: நீ விலையைக் குறைக்க வழி செய், வேலை செய்து வருமானத்தை பெருக்க வழி செய்... நான் வீடு கட்டிக் கொள்கிறேன்....)

• நீர்வளத்தை பெருக்கி விவசாயம் சிறக்கத் திட்டம் ஏதும் இல்லை... விவாசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன... கடன் தள்ளுபடி செய்ததால் பெரு விவசாயிகளே பயனடைந்தார்கள், குறுவிவசாயிகள் நஷ்டமடைந்தால் தொடர்ந்து எப்படி பருவம் செய்வார்கள்? பலர் விவசாயத்தைக் கைவிட்டு விட்டார்கள் என்பதே நிதர்சனம்... மழை வந்தால் ஊரெல்லாம் வெள்ளக்காடு, நீர் வீணாக கடலில் கலக்கும்... ஆனால் கோடை காலத்தில் நீரின்றி வறண்டு கிடக்கும் குளங்கள் ஏரிகள்... பாசனத்திற்கு நீரை மழைக்காலத்தில் சேர்த்து வைத்து, நவீன தொழில்நுட்பத்திற்கு அரசு வழிவகுத்து, தடையில்லா மின்சாரம்(இப்போது வெறும் மூன்று அல்லது நான்கு மணி நேரமே மின்சாரம் வருகிறது, அதுவும் எப்போது எனத் தெரியாது... அவர்கள் மின்சாரத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலை) வழங்கினால் விவாசயம் தங்கு தடையில்லாமல் நடக்கும், விவசாயம் சிறக்கும்... காய்கறி, சமையல் பொருட்கள் விலை குறையும்... வேளான்துறையை கவனிக்காமல் விட்டால் நம் அனைவரின் எதிர்காலமும் கேள்விக்குறிதான்... ஆனால் வேளாண்மையைப் பெருக்க எந்த ஒரு திட்டமும் இல்லை இந்த தேர்தல் அறிக்கையில்...

• தேர்தல் அறிக்கையிலேயே மிகச்சிறந்த நகைச்சுவை என்ன வென்றால் “அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் வாங்குவதை தடுக்க, புகார்கள் விரைவாக விசாரித்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உலக சாதனை மெகா 2G ஸ்பெக்டரம் ஊழல் புரிந்த அரசு ஒரு போலி வாக்குறுதி கொடுத்ததுதான்... இதையும் ஒரு ஏழை நம்பி விடுவனோ? நம்பினாலும் நம்புவான் ஒருவேளை அவனுக்கு தி.மு கழக ஆட்சியில் கண் காது வாய் வேலை செய்யாமல் போயிருந்தால்...இவர்களின் ஐந்தாண்டுகால ஆட்சியில் திமுக தலைவர், தலைவர் குடும்பம், அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து கொழுத்து ஒரு விரல் மட்டுமே வீங்கி இருக்க (இது நோய் அல்லவா)குடும்ப அராஜகம், 1.76 லட்சம் கோடிப்பணத்தை நாட்டிற்கு நஸ்டப்படுத்திய 2G ஸ்பெக்டரம் ஊழல், புதிதாக முளைத்த திரைப்பட நிறுவனங்கள் (க்ளவுட் நைன், சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், மு.க.தமிழரசுவின் மோகனா மூவீஸ்), ஏற்கனவே இருக்கும் 25 தொலைக்காட்சி அலைவரிசைகள் போதாது என்று குடும்பச்சண்டையால்(மூன்று உயிர்கள் மதுரை தினகரன் அலுவலகத்தில் போனது தமிழ்நாட்டிற்குத்தான் நஷ்டம், அவர்கள் குடும்பத்திற்கு லாபமே) புதிதாக ஐந்திற்குமேல் தொலைக்காட்சி அலைவரிசைகள் என குடும்ப வருமானத்தை பெருக்கும் சாதனைகளே பெரிதாக இருக்கபள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் கழகத்தின் அங்கமாக இமாலய கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கஇலவசம் என்ற மாயையில் தமிழகத்தையே சோம்பேறி மாநிலமாக உருவாக்கி, இதை ஏதோ உன்னத திட்டம் போல இந்திய தேசத்தின் மற்ற மாநிலங்களையும் இதன்பால் ஈர்ப்பு ஏற்படுத்தி நாட்டையே மாசுப்படுத்திகொண்டிருக்கதமிழ் இனத்தையே இலங்கையில் அழிக்கும் போதும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு படுகொலை செய்தபோதும் கண்டும் காணாது இருந்து (உண்மையில் இங்கே அது பெரிய விஷயமாக ஆகக்கூடாது என பார்த்துக்கொண்டார்), இருப்பினும் முதல்முறை குடும்ப உறுப்பினர்களின் மத்திய அரசு அமைச்சர் பதவிகளுக்கும், பின்னர் ஒருமுறை 2G ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் தன் மகளை, மனைவியைக் கைது செய்யாமல் காப்பாற்ற என தன் குடும்ப முன்னேற்றத்திர்காகவே மத்திய அரசை விட்டு விலகுவதுபோல் நாடகமாடினார் என தேசிய செய்தி ஊடகங்களே சொல்லுமளவுக்கு ஆட்சிபுரிந்து கொண்டிருக்கஇதை அனைத்திற்கும் மேலாய் தமிழகத்தையே பகுதி நேரம் இருட்டில் வாழவைத்து கொண்டு, மாதம் முதல் நாளானால் பத்திரிகையில் எப்போது மின்சாரம் கட் என தாய்மார்களை பார்க்க வைக்கும் அளவுக்கு மின்சாரப் பிரச்சனை வாட்டி கொண்டிருக்கமேலும் ஐந்தாண்டுக்கு எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும், தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டமும், வேலைவாய்ப்புத் திட்டமும், விவசாயம் சிறக்க திட்டமும் இல்லாமல் இருக்கும் இந்த தேர்தல் அறிக்கையைக் காட்டி, இலவசத்தைக் கொடுத்து, ஓட்டுக்கு பணமென ஏழைகளை மக்களை ஏமாற்றி இந்த தி.மு.க அரசு வர வேண்டுமா???இத்தகைய தி.மு.க. அரசு வர வேண்டாம் என விரும்பினால், ஏழைகளை குறிவைத்து ஆட்சியைப் பிடிக்க எண்ணும் இவர்களின் நய வஞ்சகத்திற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என விரும்பினால், உடனே செய்ய வேண்டியது இவர்களின் மோசடி வேலையை ஏமாற்று பிரச்சாரத்தை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல... நாம் அனைவரும் ஏப்ரல் பதிமூன்று அன்று நம் ஊருக்குச் சென்று தேர்தலில் நம் வாக்குகளை அளிப்பதே... நண்பர்கள் கூறினார்கள் இங்கே பேசுபவர்கள் எத்தனை பேர் ஓட்டு போடச்செல்வார்கள் என்று... சரியாக புதன் அன்று தேர்தல் வைத்திருப்பதால் (படித்தவர்கள் மாற்றி ஓட்டு போடக்கூடும் என இது கூட ஒரு சூழ்ச்சியாக இருக்குமோ? ஒரு வார இறுதி நாளிலோ இல்லை வெள்ளி அல்லது திங்கள் கிழமையில் வைத்திருக்க கூடாதா? :-( ) பெங்களூரு போன்று வெளிமாநிலங்களில் அதிகமாக வேலைப்பார்க்கும் நம் நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக ஊருக்கு வந்து நம் மக்களின் எதிர்காலம் மாண்புற தங்கள் வாக்குளை அளிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்பதே நம் அவா!