செவ்வாய், செப்டம்பர் 21, 2010

மதங்களை கடந்த ஆன்மிகம்! (பாகம் 1)

செப்டெம்பர் 17, 18, 19 தேதிகளில் சபரி மலைக்கு என்னுடைய project team யுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது... மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது... அதைப் பற்றிய பதிவு...

தயாரிப்பு
சபரிமலை நோக்கிய பயணம்
சபரிமலையில் நிகழ்வுகள்
ஊர்க்கு திரும்புகையில்

தயாரிப்பு
கிறிஸ்துவனாகிய நான், சபரிமலைக்கு செல்ல தூண்டியது இரண்டு விடயங்கள்... முதலாவது பல இந்து நண்பர்கள் மிக ஆர்வமாக சபரிமலை செல்ல தூண்டப்படுவத்தின் ஈர்ப்பு என்ன என்ற ஆர்வம் (என்னுடைய மேனேஜர் மிக மிக ஆர்வம் உடையவர், மாதந்தோரம் முதல் ஐந்து நாள்கள் நடை திறக்கையில் இரண்டு நாள்கள் தவறாமல் சில ஆண்டுகளாக சென்று வருகிறார். அதைப்பற்றி அவர் பேசாத நாட்கள் கிடையாது எனலாம்), இரண்டாவது அதற்காக அவர்களை அவர்கள் தயாரிக்கும் விதம்... (நாற்பது நாட்கள் விரதம், மாலை அணிவார்கள், சுய சுத்தம், காலை மாலை பச்சை தண்ணீர் குளியல், தினமும் ஆலயத்தில் பூஜை, இது போக கெட்டப்பழக்கங்கள் இருந்தால் விட்டு விட வேண்டும், தீய வார்த்தைகள் பேசக்கூடாது, தீய எண்ணங்களை கைவிட வேண்டும், பிற பக்தர்களையும் மனிதர்களையும் சாமி என்றழைத்து யாவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்... பலருக்கு இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பது மிக கடின விடயம்... அதிலும் குறிப்பாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் இதை கடை பிடிப்பது மிக மிக கடினம், அந்த இரு மாதங்கள் தான் சபரிமலை season என அழைக்கப்படுகிறது)

இந்த பயணத்திற்காக நாங்கள் எங்களை மிகவும் தயாரிக்கவில்லை. ஒரு வாரம் மட்டுமே தயாரிப்பு. குறிப்பாக நான் மாலை கூட அணியவில்லை. என்னுடைய ஆர்வத்தினால் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தி அவர்களுடன் இந்த தெய்வீக பயணத்தில் இணைத்து கொண்டார்கள்...

சபரிமலை நோக்கிய பயணம்
செப்டம்பர் 17 வெள்ளிக் கிழமை, மதியம் 2.30 மணிக்கு பயணம் மதுரையில் இருந்து சபரிமலை நோக்கி ஆரம்பமானது... மொத்தம் 7 சாமிகள், 2 வாகனம்... மதிய உணவும் இரவு உணவும் இரு நண்பர்கள், வீட்டில் தயார் செய்து கொண்டுவந்திருந்தார்கள்...

உசிலம்பட்டி முன்பு இரயில்வே கேட் அருகே மரததடியில் மதிய உணவு சாப்பிட்டோம். உணவினை அங்குள்ள ஏழை மக்களிடம் பகிர்ந்துகொண்டோம். எலுமிச்சை சாதம், சட்னி, தயிர் சாதம்... சாப்பாடு மிகவும் அருமையாக தயார் செய்து இருந்தார்கள்.

அருமையான மலைவழி பயணம், அதுவும் வண்டி ஒட்டாமல் பின்னிருக்கையில் உட்கார்ந்து இயற்கையை ரசித்தும் வெட்டி கதைகளையிட்டும் செல்வது எப்படி இருந்தது என்றால்... சொர்க்கத்திற்கு செல்கையில் கடவுள் இடம் அதைப்பற்றி வினவுவது போல்... இனிமையான பொழுதுகள்... மிகவும் மகிழ்ச்சியோடு பயணித்தேன்...

பிற்பாதி பயணத்தில் சில புதிய விடயங்களை பத்தி விவாதிக்க முனைந்தது. மனிதனுடைய ஆத்மா (soul) பற்றிய ஒரு உரையாடல் அது... Dr. Newton என்பவர் 'past life regression' பற்றிய ஆராய்ச்சியில் இறப்பிற்குப்பின் நிகழும் விடயங்களை, அதாவது உடலில் இருந்து ஆத்மா எப்படி பயணிக்கிறது, ஆத்மாக்களின் வகைகள் என்ன, மறுபிறவி என பல ஆயிரம் மக்களிடம் மனோதத்துவ ரீதியில் ஆராய்ச்சி செய்திருக்கிறார். அதைப்பற்றி நுணுக்கமாக விவாதித்தோம். (மேலும் விடயம் அறிய இந்த வலைக்கு செல்லவும் http://www.near-death.com/newton.html. ) ஒவ்வொரு மதத்திலும் ஆத்மா பற்றி எப்படி நோக்குகிறார்கள், சொர்கத்திற்கும் நரகத்திற்கும் ஆத்மாவின் தொடர்பு என்ன, குழந்தைகளுக்கு வரும் கனவுகள் என நீண்டது இந்த உரையாடல்...

சரியாக 9.30 மணிக்கு சபரிமலை அடிவாரம் பம்பை நதியை அடைந்தோம்... அங்கு நண்பர் கிருஷ்ணன் காத்துக்கொண்டு இருந்தார். மின் அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு இரவு உணவை முடித்தோம்... சப்பாத்தியும் தக்காளி தொக்கும், என்ன ருசி...

இரவு மணி 10.30, பம்பையில் நீராடிவிட்டு மலையில் நடக்க ஆரம்பித்தோம்... மலையிலுள்ள கோவிலுக்கு மொத்தம் 7 கிமீ. முற்றிலும் மலைப்பாதை. ஆரம்பத்தில் ஏதோ எளிதாக இருப்பது போல் தோன்றியது. பின்னர் செங்குத்தாக ஏற வேண்டி இருந்தது. நான் சிறிது தூரத்திலேயே மிகவும் களைப்பு ஆனேன். நண்பர்கள் தைரியம் குடுத்தார்கள், சுமையை பகிர்ந்து கொண்டார்கள். சிறுது எளிதானது பயணம்... அதன் பிறகு கொஞ்சம் கதை பேசிக்கொண்டு நடையை கட்டினோம்... ஒரு இடத்தில் Lime Soda கிடைத்தது... உடலுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைத்த மகிழ்ச்சி...

மலையை அடைந்தோம்... சந்தோசமாக இருந்தது மனதிற்கு... போனதும் தயார் நிலையில் இருந்த அறையில் 7 பேரும் ஓய்வெடுத்தோம்...

சபரிமலையில் நிகழ்வுகள்
காலையிலேயே எழுந்து குளித்து சாமி பார்க்க தயாரானோம்... அச்டாபிஷேகம், சிறப்பு தரிசனம், சாப்பாடு, ஓய்வு, சாப்பாடு, கதைகள், அரட்டைகள், விளையாட்டு செய்திகள், சச்சின் டெண்டுல்கர், கடவுளர் கதைகள், மதங்கள், ஆன்மிகம் என சிலபல உரையாடல்... பொழுது இனிதே கழிந்து கொண்டிருந்தது...

மேலும் விரிவாக தொடர்வேன்...

படங்கள் இந்த வலை இணைப்பில் உள்ளது... பயனடையுங்கள் நண்பர்களே :). http://picasaweb.google.co.in/snabakvinod/SabarimalaSep17To19?authkey=Gv1sRgCKres9fCo8iEDw#

படித்த நண்பர்கள் comment கொடுக்கலாமே...

5 கருத்துகள்:

Priya சொன்னது…

தலைப்பை பார்த்தவுடனே பதிவையும் படிக்க தூண்டியது... உங்க பயண அனுபவம். நானும் என் கல்லூரி நாட்களின் போது என் இந்து மத நண்பர்களுடன் கோவில்களுக்கு சென்றது நியாபகம் வந்தது.

நீங்க கொடுத்திருந்த லிங்க் மூலம் தெரியாத சில விஷயங்களையும் படித்து தெரிந்துக்கொண்டேன்.
Picasaweb ல ஃபோட்டோஸ் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. குறிப்பா மழைப்படங்கள் அழகா இருக்கு.

Unknown சொன்னது…

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி... உங்களுடைய வார்த்தை என்னை மேலும் எழுத, என்னும் நன்றாக எழுத தூண்டுகிறது... தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்...

தங்களின் "சொர்க்க பூமி" பதிப்பை படித்தேன், ஏனோ அங்கு பின்னூட்டம் எழுத இணைப்பு ஏதும் இல்லை... ப்ரௌசெர் பிரச்சினை என எண்ணுகிறேன்... எனவே இங்கே என்னுடைய கருத்து...

"பன்னீர் தெளித்து வரவேற்பதை போல் இருந்தது மேலே பட்ட சாரல். மிதமான வெயில், மலைகளில் இருந்து கொட்டும் தண்ணீர், அதன் மெல்லிய‌ சத்தம், நனைக்கும் சாரல்"

அருமையான ரசனை... இயற்க்கை எழிலை ரம்மியமாக, படிப்பவர்களை உணரத்தூண்டும் வார்த்தைகளால் எழுதியுள்ளீர்கள்... அங்கே சென்று திரும்பிய உணர்வு எனக்கு இப்பொழுது... இன்னும் இந்த இடம் ரொம்ப பிரபலமாகவில்லை போலும்... இப்படி இயற்க்கை சிற்பங்கள் எங்கெல்லாம் ஒழிந்து இருக்கிறதோ, இல்லை கவனிப்பாரற்று இருக்கிறதோ... தங்கள் பதிவிற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்...

நன்றி.

பெயரில்லா சொன்னது…

Nandru..

நம்பிக்கைRAMA சொன்னது…

எனதன்பு தம்பி,

இவ்வளவு அழகாக தமிழில் உன் அனுபவங்களை படைப்பாய் என்பதை நான் அன்றே அறிந்திருக்கவில்லையே. யு ஆர் கிரேட். நாமும் மதங்களை கடந்த உணர்வோடுதான் பழகி வந்தோம். அப்படியே தொடர்வோம். யு ஆர் கிரேட். ஆல் தி பெஸ்ட்.

Unknown சொன்னது…

நன்றி ராம்ஸ் அண்ணா... தொடர்ந்து படியுங்கள், தாங்கள் கூறும் கருத்துக்கள் என்னை மேலும் நல்ல படைப்பை கொடுக்க தூண்டும்...