அரசு பல இலவச திட்டங்களை சில வருடங்களாக அறிவித்து நிறைவேற்றி வருகிறது. இதன் நன்மை தீமைகளை ஆராய இக்கட்டுரையில் முனைகிறேன்.
இலவச திட்டங்கள்:-
இலவச வண்ணத் தொலைக்காட்சி, மானியத்தில் 1 ரூபாய் அரிசி, இலவச வீடு வழங்கும் திட்டம், இலவச மருத்துவ காப்பீடு திட்டம், இலவச எரிவாயு அடுப்பு, பள்ளி மாணாக்கருக்கு இலவச மிதிவண்டி, விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாயக்கடன் தள்ளுபடி, கிராமங்களில் அரசின் ‘100ரூபாய் வருமானத்தில் வருடத்தில் 100நாள் வேலை’ திட்டம்.
நன்மைகள்:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இத்திட்டங்களால் பயன்கள் மிக அதிகம். சாப்பாடிற்கே வழியில்லாதவர்களுக்கு 1ரூபாய் அரிசியால் சாப்பாடு கிடைகிறது. போதிய பணம் இல்லாமல் விறகு அடுப்பு பயன்படுத்துவோருக்கு எரிவாயு அடுப்பு. தொலைகாட்சி பெட்டியால் அன்றாட செய்திகளை கீழ்த்தட்டு மக்களும் அறியலாம். உறைவிடம் இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்கிறது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் மருத்துவ செலவு செய்ய இயலா மக்களுக்கு உயிர் எடுக்கும் நோய்களிலிருந்தும் மறுவாழ்வு கிடைக்கிறது. தொலைவில் உள்ள பள்ளி செல்ல மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி. இலவச மின்சாரத்தால் விவசாயத்தை மையாமாக கொண்ட நாட்டில் விவசாயம் தங்கு தடையில்லாமல் நடக்கிறது. தண்ணீரின்றி விவசாயம் தடைபட்டு கடனில் அவதியுற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி. இவற்றிக்கேல்லாம் மேலாக கிராமங்களில் மக்கள் வேலையின்றி வாடக்கூடாதென வருடத்தில் 100 நாள்கள் நாளுக்கு 100ரூபாயில் வேலை.
வேலை கிடைக்கிறது. வீடு கிடைகிறது. எரிவாயு அடுப்பு கிடைகிறது. அரிசி மலிவு விலையில் கிடைகிறது. விவசாயத்திற்கு மின்சாரம் இலவசமாக கிடைகிறது. கடன் பட்டால் கடன் தள்ளுபடி ஆகிறது. வேறு என்ன இலவசங்களால் பிரச்சனை, தீமை?
தீமைகள்:-
இவை அனைத்தும் பொருளாதாரத்தின் நடுத்தர மக்களால் கட்டப்படும் வரியால் நிகழ்கிறது. இத்திட்டங்களால் உண்மையிலேயே கீழ்த்தட்டு மக்கள் பயனடைந்து முன்னேற்றம் அடைந்தால் சமுதாயம் முன்னேறும், நாடும் முன்னேறும். ஆனால் நடப்பது என்ன?
100ரூபாய் வேலையால் வேறு வேலைக்கு ஆள் கிடைப்பது இல்லை. கட்டிட வேலைக்கும், விவசாய வேலைக்கும் ஆள் இல்லை. வருபவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். அட, அந்த 100ரூபாய் நமக்கு ஏதும் நன்மை நடக்கிறதா என்றால் இல்லை. குளங்களை வெட்ட சென்று அங்கேயே தூங்குகிறார்கள். சம்பளத்தில் சிறுது பிடித்து பணம் பார்த்து மாட்டிகொண்ட ஊர்த்தலைவர்களின் செய்தியை நாம் அறிவோம். 1ரூபாய் அரிசியை பல இடங்களில் சாப்பிட முடியாத அளவுக்கு மட்டமான அரிசி, அப்படியே நல்லா இருந்தால் கடத்தல், கடையில் வாங்கினால் நடுத்தர மக்களும் வாங்க முடியாத அளவுக்கு விலை. சரி, 1ரூபாய் அரிசியே வாங்கி சாப்பிடலாம் என்றால் காய்கறி, சாமான்கள் விலை பல மடங்கு ஏறிவிட்டது. இதனால் கீழ்த்தட்டு மக்களைப்போல் நடுத்தர மக்களும் வெகுவாக பாதிக்க படுகின்றனர்.
அடுத்ததாக இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம். இதனால் என்னவாயிற்று என்பது எல்லோருக்கும் தெரியும், அரசே முக்கிய மருத்துவமனைகளுக்கு விளம்பரம் தேடிக்குடுத்தாற்போல் ஆயிற்று. இதற்க்கு பதிலாக அரசு செலவு செய்கிற 400கோடி வருட சந்தாவை நம் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த செலவு செய்தால் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சயை அரசே கொடுக்கலாம். இதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். நடுத்தர மக்கள் கொடுக்கும் வரியின் பயனாக இருக்கும்.
அடுத்ததாக தூரமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி. நல்ல திட்டம் தான். பள்ளி அருகாமையில் எல்லா ஊரிலும் சிற்றூர்களிலும் இருக்க வேண்டும். இப்போது எந்நாளும் மக்களின் பிரிச்சனை, தனியார் பள்ளிகளின் கட்டணம் மிக உயர்வு. இது நம்மை சில வினாக்களை எழுப்பச் செய்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களின் தரம் எப்படி உள்ளது? ஏன் இப்பள்ளிகளின் கல்வி அல்லது கற்றல் முறை தனியார் கல்வி நிலையங்களின் தரத்தை போல் இல்லை? அரசு ஆசிரியர்கள் சம்பளம் வின்னைதொடும் அளவு உள்ளது, ஆனால் அவர்களை விட்டு விட்டு கட்டணம் வின்னைதொடும் அளவுள்ள தனியார் பள்ளிகளை மக்கள் ஏன் நாட வேண்டும்? அரசு தரும் இத்தனை சலுகைகளையும் தாண்டி இன்றும் பள்ளி செல்லக்கூடிய கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகள் வேலைக்கு போக வேண்டிய நிலை உள்ளது அல்லது கற்காமல் இருக்கும் குழந்தைகள் இன்றும் நாம் காண முடிகிறது, ஏன் இந்த நிலை? இந்த வினாக்களுக்கு பதில் அளிப்பதாக அல்லவா நம் அரசின் செயல்திட்டங்கள் இருக்க வேண்டும். அரசின் உதவி பெரும் பள்ளிகளின் தரம், கற்றலின் தரம் உயர்ந்தால் தானே கல்வியின் பயன்பாடு எல்லா தரப்பு மக்களுக்கு சென்றடையும்.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றி பார்ப்போம். உண்மை என்ன? மக்கள் பொது பயன்பாட்டிற்கு போதிய மின்சாரம் இல்லை, தினம் 2 மணிநேரம் மின்தடை. விவசாயத்திற்கோ 10 மணிநேரத்திற்கு மேல் மின்தடை. மின்சாரம் இருந்தாலும் தண்ணீர் பாசனம் சரியாக இல்லை. ஒருபுறம மழை வந்தால் வெள்ளக்காடு, சேமிக்க சரியான முறை இன்றும் இல்லை என்பது வேதனை. இதனால் விவசாயமே அழியும் நிலை உள்ளது. ஏற்கனவே விவசாய வேலையின் கூலி அதிகமாகி விட்டது. குறு விவசாயிகள் பெரும் பாதிப்பில் உள்ளனர். இவர்கள் கடன் தள்ளுபடி செய்தாலும் திரும்ப விவசாயம் செய்வது எப்படி. இதனால் பெரும் பயனடைந்தது அரசியல் சார்ந்த பெரும் விவசாயிகளே. விவசாயத்தின் அழிவு நிலையில் இருக்கிறோம். அரசு உடனே மிக விரைவாக தண்ணீர் பாசனத்திற்கு வழிசெய்ய வேண்டும். தொழில்நுட்பத்தை குறுவிவசாயிகளுக்கும் கொண்ட செல்ல வேண்டும். இதை செய்யாவிடல் விவசாய நாட்டில் விவசாயம் அழிவுநிலை வரும். இதை விட்டுவிட்டு மேற்போக்காக, அரசியல் இலாபத்திற்காக, தற்காலிக தீர்வாக இலவச மின்சாரம், மோட்டார், கடன் தள்ளுபடி என்றால் பின்னால் வரும் சந்ததிகளின் இழிநிலையை நாமே காண வேண்டியதாகிவிடும். நன்றாக விவசாயம் நடுக்கும், வருமானம் ஈட்டும் பட்சத்தில் ஏன் அரசு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்களே உரிய நேரத்தில் கட்டிவிடுவார்களே. நாடும் முன்னேற்ற பாதையில் செல்லுமே.
இலவச தொலைக்காட்சி பெட்டியைப்பற்றி பேசவே வாய் வரவில்லை. ஏற்கனவே ஒரு ஏழை விவசாயி அரசிற்கே திருப்பிக் கொடுத்து பாமர மக்களின் மனநிலையை அரசுக்கு கூறி முன்னுதாரணம் ஆகி விட்டார். இந்த இலவச எந்த பயனும் மக்களுக்கு ஏற்பட போவதில்லை. 1ரூபாய் அரசி சாப்பிட்டு, ஒழுங்கான வேலை செய்யாமல், சொம்பேரித்தானமாக பெரும் தொடர்களும், அரசில் இருப்போரின் குடும்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரித்த செய்திகளையும் பார்க்கும் இழிநிலை இனிமேல் எந்த சமுதாயத்திற்கும் வரக்கூடாது. இதனால் அக்குடும்பத்தின் நிரந்தர வருமானம் உறுதிப்படுத்தப்பட்டது.
இலவச வீடுகள் கட்டும் திட்டம் சொன்ன உடனே வீடுகட்டும் பொருட்கள் விலை அனைத்தும் ஏறிவிட்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இதனால் வரிகட்டியே தன் பெரும்பங்கு வருமானத்தை இழக்கும் நடுத்தர மக்களின் நிலைதான் அரோகதி.
முடிவுரை:-
இக்கட்டுரையின் முடிவுரை வந்தாயிற்று, ஆனால் இந்த இலவசம் என்ற மாய நிலைக்கு முடிவு காலம்தான் வருவது என்றோ...?
மக்களுக்கு தேவை நல்ல விவசாயம் பண்ணக்கூடிய நிலை, நல்ல உட்கட்டமைப்பு (சாலை, தொடர்பு), நல்ல வேலை, நல்ல ஆரோக்கியமான நிலை, நல்ல கல்வி, நல்ல அடிப்படை வசதிகள். இவையெல்லாம் அரசு சாரமலேயே படிப்படியாக அதுவாகவே வளர்கிறது. அதை இலவசங்கள் கெடுத்துவிட கூடாது. நாட்டின் வளர்ச்சி தடைப்படக்கூடாது. நாட்டின் முன்னேற்றம் வெறும் தோற்றமாயிறாமல் சீரான வளர்ச்சியாக இருக்க வேண்டும்.
வருங்காலத்தில் நல்ல சமுதாயம் உருவாக, நாடு நல்ல நாடாக வளர அரசு உதவ வேண்டும். அறத்தை மக்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். ‘கடைசி ஒரு ஏழை இருக்கும் வரை இலவசம் தொடரும்’ என்று அரசு சொல்வது மக்களை ஏழையாகவே வைப்பதற்கான முயற்சியேயன்றி உண்மையான வளர்ச்சிப்பணி அல்ல. ‘நாட்டின் நிலை அறிந்து வளர்ச்சிப்பணிகள் செய்யும் அரசே மக்கள் மதிப்பை பெரும், இல்லை மக்கள் மதிப்பை இழக்கும்’ என்ற அய்யன் கூற்றை அரசு எண்ணி இலவச மாயையால் நிகழப்போகும் எதிர்வினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நலமாகும். மக்களும் அறியாமையில் மூழ்கி இலவச மாயையில் சிக்காமல் வெளிவர வேண்டும்.
குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு
விளக்கம்
நாட்டுநிலை ஆராயாமல் முறையில்லாமல் ஆட்சி புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
11 கருத்துகள்:
Only lazy and selfish peoples will vote for D.M.K
சரி தான் S V.
மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்
நன்றி ஜெகதீஷ், நன்றி தமிழ்.
நாம் விழிப்புடன் இருப்போம். விழிப்பை ஏற்படுத்துவோம்.
என்ன ஒரு ஒற்றுமை :-). மூன்றாம் தேதி இலவசம் பற்றி பதிவு எழுதிவுள்ளேன். நான்காம் தேதி 'அம்மா'வின் இலவசம் பற்றிய அறிக்கை. பாதி செய்திக்கு மேல் நம்மளோட பதிவின் செய்திகள் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. கவனிக்கவும் http://www.dinamalar.com/News_Detail.asp?Id=159519. :-).
இப்போது தான் உங்கள் ப்ளாக்கைப் பார்க்கிறென். பொறுமையாகப் ப்டித்துவிட்டு வரவா?
இலவசம் என்பது மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதற்கான உத்திதான். மக்களின் அறியாமையை அரசியல்வாதிகள் நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதை மக்கள்தான் உணர்ந்து திருந்த வேண்டும்.
நன்றி அகிலா... தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்!
இலவசம் பற்றிய தங்களின் கருத்து தெளிவாகவும், என் கருத்தை ஒத்தும் இருக்கிறது, நன்றி.
தொடர்ந்து படிக்கவும்...
//இலவச வீடுகள் கட்டும் திட்டம் சொன்ன உடனே வீடுகட்டும் பொருட்கள் விலை அனைத்தும் ஏறிவிட்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இதனால் வரிகட்டியே தன் பெரும்பங்கு வருமானத்தை இழக்கும் நடுத்தர மக்களின் நிலைதான் அரோகதி//
பின்னே, கொடுக்கிறமாதிரி கொடுத்துட்டு எடுக்கிறமாதிரி எடுக்கவேண்டாமா?
எனினும் மாற்றமும் முன்னேற்றமும் மக்களின் விழிப்புணர்ச்சியில்தான் இருக்கிறது.
இன்றுதான் உங்க ப்ளாகைப் பார்த்தேன். உங்க அப்பாவைப்பற்றிய பதிவும் படித்தேன். ஆசிரியரான என் அப்பாவைப்பற்றிப் படிப்பதுபோலவே இருந்தது.
நன்றி சுந்தரா. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்...
//எனினும் மாற்றமும் முன்னேற்றமும் மக்களின் விழிப்புணர்ச்சியில்தான் இருக்கிறது.//
நல்ல, ஆழமான, உண்மையான கருத்து. அதற்காகத்தானே முயல்கின்றோம் எல்லோரும் :):)
you right, the same thing is happening in my village also.....
machi...
reading your blog first time.
nalla irundhuchu da....
keep it up
கருத்துரையிடுக