புதன், பிப்ரவரி 22, 2012

அணுக்கழிவும் அப்துல்கலாமும் 1

அணுக்கழிவும் அப்துல்கலாமும் 1


(நண்பர் வலைப்பூவில் இருந்து தற்சமயம் இந்தப் பதிவை படிக்க முடியாததால் இங்கே மீள்பதிவிடுகிறேன்)  

ஏதோ அணுஉலை என்றால் சோத்துபானை என நினைத்தார்களோ என்னவோ எங்குபார்த்தாலும் கூடங்குளம் திறந்தால் நமக்கு வெளிச்சம் கிடைக்கும் எனஎங்கும் பேச கண்டதாலே இந்த பதிவு

சிலப்பதிகார வரிகள், ஒரு மலையையே கடல்
விழுங்கியிருப்பதைக் கூறுவது நாம் அறிந்ததுதானே?

சோழர் தலைநகரமாக ஒரு காலத்தில் விளங்கிய
பூம்புகார் கடலுக்குள் மூழ்கி முகவரி  தெரியுமா விஞ்ஞானிகளே?

மாமல்லபுரம் மூழ்கிக் கிடப்பதை இன்ணும் நாம் தினசரி கண்டுகொண்டேதான் இருக்கின்றோம் என்பதை மறந்துவிடவேண்டாம்
கேரளத்திலே வஞ்சி மாநகரம் கடலில்
மூழ்கிப்  போனதை தெரிந்துகொள்ளுங்கள்?

1970
களில் தணுசுகோடி கடலால் மூழ்கிப் போனதை
மறந்துவிட்டோமா?

            
சேதுகால்வாய் திட்டத்தை முடக்கும்போதும் ஈழத்தில் 2 லட்சம் தமிழ் உறவுகள் கொன்றொழிக்கும்போது தனது மாமியா வீட்டில் மல்லாக்க படுத்திருந்தாரோ என்னவோ அப்போது வாய் திறக்க வில்லை, இப்போது அப்துல் கலாம் கூடங்குளம் மின் நிலையத்துக்குள் இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 க்குள் ஆய்வு நடத்தி விட்டு, ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானதுஎன்று 40 பக்க அறிக்கையை (வருவதற்கு முன்பே எழுதி வைத்து கொண்டுவந்ததை) கூடிய தகவலை எப்படி எழுதினீர்கள் என்பதை பார்க்கும்போது உண்மை புரிந்து விட்டது காங்கிரஸ் கட்சியின் கை கூலியென.

                
கூடங்குளம் பகுதி நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படாது என்று திருவாய் மலர்ந்த கலாம் அவர்களே , 2004இல் தமிழக அரசு புள்ளிவிவரப்படி நாகப்பட்டினத்தை  சுனாமி கோரவத்தால்  கன்னியாகுமரி  தாக்கிய சுனாமியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 808.  என்பது தெரியுமா?

  
கூடங்குளம் மின் நிலயம் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால்,  சுனாமி போன்ற தாக்குதலால் சேதம் அடையாது என்று கூறும் கலாம் அவர்களே , சுனாமியின்போது குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு  13.5 மீட்டர்  சுனாமி அலைகள் அலைகள் வீசியது   என்பதை தெரிந்துகொள்ளுங்கள் கலாம் அவர்களே.  நீங்கள் 133ஐ விட 42 பெரிது என்பது கண்டுபிடித்தமைக்கு விஞ்ஞானி என பட்டம் கொடுத்தது சரியே?

            
அணு உலை விபத்துக்கள் உலகம் முழுவதும்  இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என சொல்லும் கலாம் அவர்களே 1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 56 விபத்துகள் 1986இல் செர்நோபில் விபத்துக்குப் பிறகு நடந்தவை அணுவிஞ்ஞானியான உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை காரணம் காங்கிரஸ் உங்கள் வாய்யை அடைத்ததினால் என்பது இந்த கேனக்கிருக்கணுக்குத் தெரியும்

    
அது சரி நீங்கள் மட்டும் ஒரே இரவில் அதுவும் 1 மணக்கு உள்ளே சென்று விடியற்காலை 4 மணிக்குள் வெளியேவந்து  75 நாட்களுக்குமேல் உண்ணாவிரம் இருப்பவர்களை சந்துத்து விளக்கம் தராமல் செய்தி நிறுவனங்களுக்கு மட்டும் விளக்கம் அளித்தீர்கள் ஆனால் மறுநாள் தமிழக அரசுமூலம் நியமித்த அணு விஞ்ஞானிகள் ஒரே நாளில் ஆய்வு செய்திட முடியாது எனவும் குறைந்தது 7 நாட்கள் ஆகும் என அறிக்கை விட்டனர் அணு விஞ்ஞானிகள் அப்படியெனில் நீங்கள் அறிவாளியா அல்லது யார் முட்டாள் என்பதை தமிழக மக்களுக்கு சொல்லுங்கள் பார்ப்போம்

            
கூடங்குள தரகர் திரு கலாம் அவர்களே 4, மே 1987இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர். 10, செப். 1989தாராப்பூர் அயோடின் கசிவு  கதிர்வீச்சு 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர்.  3, பிப். 1995 கோட்டா ராஜஸ்தான்  ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டு மூடல். செலவு 280 மில்லியன் டாலர். 22, அக். 2002  கல்பாக்கம்100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர். (பொன்.ஏழுமலை, தினமணி, 24 நவ.) இவை இந்தியாவில் நடந்த சில விபத்துகள். இவற்றில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர்; இறந்தவர்கள் பலர். உண்டு என்பதை இந்த கேனக்கிருக்கன் சொல்லும் அளவிற்கு சிறந்த விஞ்ஞானி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

          
செர்னோபில் விபத்தில் இறந்தவர்கள் வெறும் 57பேர் மட்டும்தான் எனப் புளுகுகிறார் கலாம். அவர்களே
 
புற்றுநோய் வந்து 70,000 பேர் உயிரிழந்ததாகவும், இன்றும் பல்லாயிரம் பேர் அதன் பாதிப்பினால் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் அமெரிக்காவின் நியுயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ் கூறுகிறது.  என்பதை மறந்து விடவேண்டாம்

           
ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசியாவில் அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீவெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன்  உலைகளுக்கு
இல்லவே இல்லைஎன்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர் அப்படி இருக்க
. கலாமோ கூடங்குளம் உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என கூறும்போது நீங்கள் மத்திய அரசிடம் 100 கோடி  வாங்கி சுருட்டி விட்டீர்களோ என பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா

 
அணுஉலையில் விபத்தே இல்லையென கூறும் கலாம் அவர்களே
விபத்து ஏற்பட்டல் எப்படி தப்பிப்பது என ஒத்திகை நிகழ்வு நடத்தி மிகுந்த சத்தத்துடன் ஊரே காலி செய்து ஓடும் அளவிற்கு பொதுமக்களை வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு ஓட ஒத்திகை நிகழ்ச்சி நடத்தியது ஏன்?
விபத்து நடக்கவில்லை என்றால் விபத்து காப்பீடு திட்டம் அறிவித்தது ஏன்

            
ஊழலில் உறைவிடமாக திகழும் நம் இந்தியாவில் கூடங்குளம் அணுஉலையில் கடந்த ஜூலை 14 அன்று கூடங்குளத்தில் . லெனின்கிராட் உலையில் ஐந்தடி கனமுள்ள கவசச் சுவர்களைக் கட்டும்போது கான்கிரீட் ஊற்றுகையில் இரும்புக் கம்பிச் சட்டங்கள் சிதைந்து நொறுங்கின. சுமார் 1200 டன் இரும்புக் கம்பிச் சட்டங்களையும் இப்போது அகற்றிவிட்டு புதிதாகக் கட்டவேண்டும்.ஊழலில்தான் இப்படி நடத்தது என்பது ம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்

          
வளர்ந்த ஜெர்ம‌னி,சுவிட்ச‌ர்லாந்து, ஜ‌ப்பான் உள்ளிட்ட‌ ப‌ல‌ நாடுக‌ள் த‌த்த‌ம‌து அணு உலைக‌ளுக்கு மூடுவிழா நட‌த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா ம‌ட்டும் அணு உலைக‌ளை தொட‌ங்குவ‌து ஏன்

         
மகேந்திரகிரியில் உள்ள அணு திரவ திட்டம், நாங்குநேரியில் ஐ.என்.எஸ். நெல்லை கட்டபொம்மன் போன்ற கதிர் இயக்க அமைப்பு, கடந்த 10 ஆண்டுகள் வரை இந்த வட்டாரத்தில் உணரப்பட்ட நில அதிர்வுகள், பாறைக் குழம்புகளால் ஏற்பட்ட அதிர்ச்சி என்ற நிலையில் கூடங்குளத்தில் சின்ன ஆபத்து ஏற்பட்டாலும் கற்பனை செய்ய இயலாத, தாங்க முடியாத அழிவுகள் ஏற்படும் என்ற அறிக்கை தாக்கல் செய்ததை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

          
இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டுக் கழகமே அணுஉலையிலிருந்து 16 கி.மீ. தொலைவுக்குள் 10,000 மக்கள் உள்ள ஊர் இல்லாமல் இருக்கும் ஊரில்தான் அணு உலை அமைக்க வேண்டும் என  விதி உள்ளது, அப்படி இருக்க  இங்கோ இந்த எல்லைக்குள் உள்ள கூடங்குளத்தின் மக்கள் தொகை 11,029. பழவூரின் மக்கள் தொகையோ 15,811. லெவிஞ்சிபுரத்தின் மக்கள் தொகையோ 12,679. என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

             
நீங்கள்  40 பக்கத்தில் அறிக்கை கொடுத்த அணுமின் நிலயத்தில் இதுவைர
இந்த அணுஉலைகளில் எவ்வளவு எரிபொருள் பயன்படுத்தப்படும்; அதிலிருந்து எவ்வளவு கதிரியக்க கழிவு வெளியாகும் என்பது போன்ற தகவல்கள்கூட  யாரிடமும் சொல்ல மறுப்பது ஏன் ?

இங்கு மாமியா குழம்பு வைத்தால் மறுமகள் சாப்பிடுவதில்லை
மறுமகள் குழம்பு வைத்தால் மாமியா குழம்பு சட்டியே தொடுவதில்லை  என்ற கதையாய்

.
பல்லாயிரம் டன் கதிரியக்கக் கழிவை பல ஆயிரம் வருடங்கள் இங்கே எப்படி பாதுகாக்கப் போகிறார்கள் என்பது  குறித்து ஏதாவது உத்தேசம் உண்டா கலாம் அவர்களே

 
தற்போது கல்பாக்கம் அணுஉலைகள் வெறும் 460 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்கின்ற போது  இரண்டிலும் இருந்து வெளியாகும் கழிவு நீரால் அப்பகுதி கடல் 10.3 டிகிரி வரை சூடாகிறது என்கிறது அரசு அறிவிக்கை அப்படி இருக்க கூடங்குளத்தில் .1000 மெகாவாட் திறணுடைய 6 உலைகள் அமைக்க இருக்கும் இந்த வேளையில் ஆனால், கடல் நீர் மட்டும் 7 டிகிரிதான் சூடாகும் என்கிறீர்கள் நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள் சொல்லுங்கள் உங்கள் கணக்கு வாத்தியாரை பார்க்க வேண்டும்

தமிழன் உயிருக்கு உலை வைக்கும் கூடங்குளத்திற்கு ஆதராவாக கூசா தூக்கும் க லா ம் அவர்களே  பல்லாயிரம் கோடி செலவில் தோண்டப்படும்  சேதுக்கால்வாய் கிடப்பில்
போடப்பட்டுள்ளதை பற்றி எப்போதாவது வாய் திறந்தது உண்டா?

 
முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே  கடந்த வருடங்களில் உங்கள் கண்முன்னே
 கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த மின்னணு கட்டுப்பாட்டு கோபுரம்  இடிந்து விழுந்ததில் பலர் படுகாயமடைந்ததும்  அணு உலைக்கான கருவியொன்று கொண்டு வரப்பட்ட போது உயர் அழுத்த மின்கம்பி  இருவர் இறந்துவிட்டதும்  அண்மையில் நீங்கள் கூடங்குளத்திற்கு வந்தபோதுகூட, நீங்கள்  நின்ற இடத்திற்கு சில அடிகள் தொலைவில் இருந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. குளிர்சாதனத்தை இயக்க கூரைக்கு மேல் பொறியாளர் ஏறியபோது இடிந்து விழுந்தது உண்மையில் நீங்களா  காப்பாற்றப் போகிறீர்கள்

 
புறா திட்டம் என்ற பெயரில் கூடங்குளம் பகுதிக்கு நீங்கள் பத்து அம்சத் திட்டத்தில். கூடங்குளத்தில் மருத்துவமனை, சாலை, தொழிற்சாலை, பள்ளி, விளையாட்டு மைதானம், 200 கோடிக்கு வளர்ச்சித் திட்டம் சிபாரிசு செய்திருப்பதை பார்க்கும்போது   இந்தியாவில் கேவலமான ஓட்டுக்கு விலை பேசிடுவதை போல  ஒரு பெண்ணின் மானத்தை விலை பேசுவதையும் விடக் கேவலமாக கீழ்த்தரமானது,   நீங்கள் நடத்து கொள்ளும் விதம் என நீங்கள் கனவு மட்டுமே காணச்சொன்ன இளைஞர்கள் பலர் நெஞ்சில் பதியம் போட்டு விட்டனர் என்பதை மறந்து விடவேண்டாம்

   5 4 
எத்தனை என கூட்டத்தெரியாத எம் தமிழ்சாதியினர் கூடங்குளம் 30 ஆண்டுகளில் மூடிவிடவேண்டும் எனவும் அணுக்கழிவைப் பராமரிக்கும் செலவு  மிக மிக அதிகம் என்றும் அணுக்கழிவை பல ஆயிரம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் எனவும் கழிவின் கதிர்வீச்சு 25,000 ஆண்டுகள் நீடிக்கும். அதனைப் பாதுகாக்க பல்லாயிரம் கோடி செலவு. ஆகும் ’.    என எத்தனை பேருக்குத் தெரியும் என உங்கள் மனதை தொட்டு
சொல்லுங்கள்  பார்ப்போம்

   
ஆபத்து இல்லா அணு உலையே அகிலத்தில் இல்லை. எனவே கூடங்குளத்தில் அபாயம் என்றால் அதன் பாதிப்பு வடக்கே மதுரை, தென்கோடியில் திருவனந்தபுரம், மேற்கே மலைத்தொடர், கிழக்கே வங்கக்கடல், இலங்கை என்று பாதிப்பு. வாழ்வா சாவா என்ற கேள்விக்குறியின் நிம்மதியற்ற நிலை. 150 கி.மீட்டர் சுற்றிப் புல், பூண்டு எல்லாம் அழிந்துவிடும்

          
கூடங்குளம் உலையின் அணுக்கழிவுகள் ரசியாவுக்குக் கொண்டு செல்லப்படும் என்று முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், ஏன் பல்டி அடித்தார்கள் என சொல்லுங்கள் பார்ப்போம்

               
நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்தமைக்காக பெருமைபட்ட நான் 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஏன் ஒரு அணுஉலை கூட அமைக்கவில்லை?” என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் இருக்கும் போது உங்களை எப்படி அணு விஞ்ஞானி ஏற்பது என இந்த கேனக்கிருக்கணுக்கு கேள்வியாய் பிறந்து கடைசியில் கேலியாய் முடிந்து போனது

.          1986
செர்னோபிலின் அணு உலை ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையவை என கூகிளில் லேசாக ஒரு தேடலை தொடங்கிவிட்டு வாய் சவுடால் விடும் நாரவாயன் நாரயணசாமி சிவகங்கை தொகுதியில் பிராடு தனம் செய்து ஜெயித்த ப, சிதம்பரம் ,வீ,,கே எஸ் போன்றவர்களை கூடங்குளத்திற்கு அருகிலே குடியமர்த்திவிட்டு நீங்கள் நாளையே கூடங்குளத்தை திறங்கள் தமிழர்களாகிய நாங்கள் மிகவும் சந்தோசப்படுவோம் உண்மையில்
அல்லது   அணு உலை பாதுகாப்பானதுதான் தொடர்ந்து கிளிப்பிள்ளை போல் கூறி வருகிற அதிமேதாவிகளே நீங்கள் ஏன் ஒரு அணு உலையைக் கூட தில்லியில் நிறுவவில்லை? இல்லையேல் அணு உலையை ஆதரித்துப் பேசுபவர்களை ஒரே இடத்தில் குடியமர்த்தி அங்கு ஒரு அணு உலையை நிறுவுங்கள். பார்ப்போம் உங்களின் இந்திய பற்றை

இன்று வரை கூடங்குளம் தொடர்பாக வெளிப்படையாக  பதிலளிக்காமல், “இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்கு யார் தயாரித்துக் கொடுத்தார்கள்?” என நீங்கள்
கேட்கும்போது  உண்மையில் நான் ஏன் இந்தியாவில் பிறந்தேன் என எனக்கே  வெக்கமாக இருக்கிறது

ஃபூகுஷிமாவை விபத்தின் எதிரொலியாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்வீடன் என பல நாடுகள் தங்களின் அணு உலைகளை மூட கெடு நிச்சயித்து விட்டபோது இந்தியாவில் அதுவும்
தமிழ்நாட்டில் ஏன் துவங்க வேண்டும்.

இருபத்தைந்து மற்றும் அதற்குக் குறைவான மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் சிறிய நீர்மின்நிலையங்கள், காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் பெறப்படும் ஆற்றல்கள், உயிரி ஆற்றல்கள், நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை சார்ந்த திட மற்றம் திரவக் கழிவுகளிலிருந்து பெறப்படும் ஆற்றல் ஆகியவை புதிய மற்றும் புதுப்பித்தக்க ஆற்றல்கள் எனப்படுகின்றன. நமது நாட்டில் அவற்றிற்கான வாய்ப்புகளைப் பார்ப்போம்.

அரசியல்வாதிகளே,அறிவியல்அறிஞர்களே,எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும்
காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை
எமது நிலத்திலே எங்கள் பணத்திலே
விதைக்கும் முன்னர், எம்மை
ஒரு வார்த்தையேணும் கேட்டீர்களா?"
"இது இன்னது இது இத்தன்மையது
என்று எங்களுக்குக் கல்வியூட்டியபின்
கட்டினீர்களா?

சிறிய நீர்மின் நிலையங்கள்

மாபெரும் நீர்த்தேக்கங்களை உருவாக்கி மின்ணுற்பத்தி செய்வதை விட ஆறுகளில் ஆங்காங்கே சிறு சிறு தடுப்பணைகளை உருவாக்குவதன் மூலம் குறைந்த செலவில் அதிக அளவு மின் உற்பத்தி செய்ய முடியும். இந்த வகையில் மட்டும் 15,000 மெகாவாட் மின்சாரம் அடுத்த ஆண்டிற்குள் நமக்குக் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் அரசு கவனம் செலுத்தினால் நாடு முழுவதும் ஏராளமான சிறு சிறு தடுப்பணைகள் மூலம் ஏராளமான மின் ஆற்றல்களைப் பெற முடியும்.

காற்றாலைகள்

               
காற்றாலைகள் மூலம் தற்போது 14,158 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காற்றாலைகள் மூலம் 65,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய வாய்ப்பு இருந்தபோதும் அரசு அதற்குப் போதிய ஊக்கம் அளிப்பதில்லை. மின் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து பயன்பாட்டு இடத்திற்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான உள்கட்டுமானங்களைப் போதிய அளவுக்கு அரசு உருவாக்கித் தருவதில்லை.அதனால் காற்றாலை மூலம் பெறப்படும் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை சார்ந்த கழிவுகள்

                
நமது நாட்டில் தற்போது ஆண்டு ஒன்றுக்கு நகர்ப்புறங்களிளிருந்தும் தொழிற்சாலைகலிளிருந்தும் 4.2 கோடி டன்கள் திடக்கழிவும் 600 கோடி கன மீட்டர் திரவக்கழிவும் உருவாகிறது. இவற்றை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும். தற்போது நமது நாட்டில் ஆறு இடங்களில் மட்டுமே கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.அதன் மூலம் 19.05 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடெங்கும் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் இன்ணும் ஏராளமான மின்சாரத்தைப் பெறமுடியும்.

              
இத்திட்டத்தின் மூலம் மின்சாரத்தைப் பெறுவதோடு மட்டும் அல்லாமல் நாட்டின் பெரும் பிரச்சினையாக இருக்கும் மாசு பிரச்சினையை ஒழித்து விடலாம். நதிகள் நாசமடைவதைத் தடுத்துவிடலாம். மேலும் அதிலிருந்து கிடைக்கும் நீர்மப் பொருட்கலவை(Slurry) நிலத்தை வளப்படுத்துவதற்கு நல்ல உரமாகப் பயன்படும். உரங்களின் இறக்குமதிக்காக நாம் ஆண்டு தோறும் செலவிடும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நியச் செலாவணி மிச்சமாகும்.

சூரிய வெப்ப ஆற்றல்

         
சூரிய வெப்பத்திலிருந்து நாம் வற்றாத ஆற்றலைப் பெறமுடியும்.ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் 20,18,110 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள பாலைவனம் உள்ளது. அதில் வெறும் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலிருந்தே 3,00,000 மெகாவாட் மின்சாரத்தை சூரிய வெப்பத்திலிருந்து பெறமுடியும். ஆனால் 2013-க்குள் 20,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
சரியாகத் திட்டமிட்டால் இந்தியாவில் உள்ள பெரும்பகுதியான கிராமங்களின் மின் தேவையை சூரிய வெப்பத்திலிருந்தே நிறைவு செய்து கொள்ளமுடியும்.

உயிரி ஆற்றல்(Bio-energy)

         
இன்றும் நமது மக்களில் எழுபது விழுக்காட்டினர் உயிரி ஆற்றலைச் சார்ந்துதான் உள்ளனர். மொத்த ஆற்றல்களில் முப்பத்திரண்டு விழுக்காடு உயிரி ஆற்றலாகத்தான் உள்ளது. ஆண்டுதோறும் 500 கோடி மெகாவாட் உயிரி ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது. அதன் மூலம் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய உள்ளுறை ஆற்றலைக் கொண்டுள்ளது உயிரி ஆற்றல்.

          
வனங்களிலிருந்தும் வேளாண்மையிலிருந்தும் தாவரக்கழிவுகளாக நமக்கு ஆண்டு ஒன்றுக்கு ஐம்பது கோடி டன்கள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்தியாவில் உள்ள 550 சர்க்கரை ஆலைகளிலும் கிடைக்கும் சர்க்கரை உற்பத்திக் கழிவுப்பொருட்களிலிருந்து மின் உற்பத்தி செய்ய முடியும். மேலும் சர்க்கரை ஆலைக் கழிவுகளிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் நமது ஆற்றலின் உற்பத்தியைப் பன்மடங்கு அதிகப்படுத்தலாம். உயிரி ஆற்றல் காற்றில் கார்பன்-டை ஆக்சைடின் அளவை அதிகப்படுத்தாது. சுற்றுச் சூழலைக் கெடுக்கவும் செய்யாது.

            
இவ்வாறு சுற்றுச்சூழலைக் கெடுக்காத, வற்றாத ஆற்றலுக்கு உரிய மூலாதாரங்களைத் திட்டமிட்ட வழியில் பயன்படுத்துவதன் மூலம் நமது மின் தேவையை நிறைவு செய்ய முடியும். தீங்கு இல்லாத வகையில் மின் உற்பத்தி செய்ய முடியும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். நமது நகரங்களையும் நதிகளையும் மாசுகளால் நாசமடைவதிலிருந்து பாதுகாக்க முடியும் .இதற்குத் தேவை நாட்டு மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள அரசு.

கூடங்குளம் தொடர்பாக இன்ணும் படுமோசமாக வாழ்த்திட
ஆதரத்தோடு உங்களிடம் விரைவில் வளம் வருவேன் ணு
இந்த கேனக்கிருக்கனை திட்டுவதாக இருந்தால்
பெயர்: சிகா, லெனின் கீரமங்கலம் 9047357920

http://kenakkirukkan.blogspot.in/2012/02/blog-post.html