செவ்வாய், மே 01, 2012

கூடங்குளம் போராட்டத்தில் என் பங்கும் சாட்சியமும் - 1

கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் வருவதாக முதன்முதலில் தொண்ணூறுகளின் ஆரம்பக் கட்டத்தில் எங்கள் கிராமத்திற்கு செய்தி கிட்டியது. அப்போது எனக்கு சுமார் ஏழு வயது இருக்கும்...

ஊரைப்பற்றி சிறிய முன்கதைச் சுருக்கம்:

எங்கள் ஊரில் (திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், கள்ளிகுளம் கிராமம்தான் என்னுடைய ஊர் - கூடங்குளத்தில் இருந்து சுமார் இருபது கி.மீ. தொலைவில் வடக்கில் உள்ளது, வள்ளியூரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் கிழக்கில் உள்ளது) அனைத்து சாதி மக்களும் சேர்ந்து வாழ்கிறார்கள். இங்கே நாடார்கள் மீனவர்கள், கோனார்கள், முடித் திருத்துபவர்கள், வண்ணார்கள், தலித்துகள், தேவர்கள், பிள்ளைமார்கள் போன்ற சாதி மக்கள் வாழ்கிறார்கள்... தெருக்களை அவர்கள் சாதிப் பெயராலே அறிகிறோம். அண்ணன் தம்பி போல பழகினாலும்சாதி வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக தலித்துகள் இன்னமும் சேரியில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அந்த திசையில் மட்டும் வளராமல் இருந்த எங்கள் ஊர், கடந்த இருவருடங்களாக அந்த எல்லையையும் உடைத்து விட்டது. நிலத்தின் மீது அதிக மோகம் இப்போது அந்த பகுதியில் தான் என்பது திருத்தப்பட்டக் கதை :)).

அம்மன்கோவில், சுடலைமாடசாமிக் கோவில், சாச்தாக் கோவில் கொடை(திருவிழா)யாக இருந்தாலும் சரி, மாதாக் கோவில் திருவிழா என்றாலும் சரி, பள்ளிவாசலில் நோன்புக்கஞ்சி பண்டிகை என்றாலும் சரி, அருகாமை ஊர் திருமலாபுரம் அய்யா வழி கோவில் திருவிழா என்றாலும் சரி எங்களுக்கு ஒன்று தான். இப்போதும் எல்லாரும் எல்லாக் கோவிலுக்கும் செல்கிறோம். தடையேதுமில்லை. பக்கத்து ஊர்களுக்கும் செல்கிறோம். எங்களுக்கும் சமைய பேதம் பெரிதாக இருந்ததே இல்லை. சாதி பேதம் உண்டு, ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் ஆண்டான்-அடிமை முறை இல்லை. எல்லாதரப்பு மக்களிலும் பணக்காரனும் இருக்கிறான் ஏழையும் இருக்கிறான். பதவியிலும் அரசியலிலும் கலந்தே இருக்கிறார்கள். ஊருக்கு ஒரு பிரச்சினை என்றால் ஒன்றனையும் மனத்தோடுதான் வாழ்கிறார்கள். என்ன, வாழ்வியலும் மதச் சடங்கும் சாதியைச் சுற்றியே உள்ளது.

இங்கே முன்பு பிரதானத் தொழில் விவசாயம். ஆற்றுப்பாசனம் கிடையாது. குளத்துப் பாசனம், மழை வந்தால் குளத்தை கால்வாய், ஓடைகள் மூலம்நிரப்பி கிணத்தில் ஊரும் நீரில் விவசாயம் பார்ப்பார்கள். சிறுவயதில் மழைப் பருவத்தில் விவசாயம் சிறப்பாக நடக்கும், எப்போதும் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கும், அதனால் கிணத்திலும் தண்ணீர் அதிகமாக இருக்கும். அதனால் எங்கள் ஊர் சிறார்அனைவருக்கும் நீச்சல் சிறு வயதே தெரியும்.பின்னர் மழைகுறையவே, வானம்பார்த்த பூமியாகி,குடிக்கவே தண்ணீர்பஞ்சம் ஏற்பட்டுவள்ளியூர் பெரியகுளத்தில் போர்போட்டு தண்ணீர்எடுத்து இப்போதுவரைகுடிநீர் பஞ்சமின்றிஇருக்கிறோம். அவ்வளவே... அனைவர் வீட்டிலும் போர்(நிலத்தடி நீர்உப்பு நீர்,அதனால் குடிக்கமுடியாது), தெருவில் குடிநீர் நல்லியில் வரும்.நல்ல மண்உள்ள ஊரில்அதிக நாள்நீர் தேக்கவசதியும், மழையும்குறைவானதால் நன்செய் புன்செய் நிலங்கள் பொட்டல்காடாகிவிட்டது. இராதாபுரம் வட்டமே அப்படித்தான், அதனால்தான்அரசியல்வாதிகளுக்கும் அரசிற்கும் இந்தநிலத்தின் மீதுஒரு கண்.பற்றாக்குறைக்கு விவசாய நிலங்கள் அனைத்தையும் வீட்டுமனைகளாகலோக்கல் கேபிள்தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்துவிற்று கொண்டிருக்கிறார்கள்.அவ்வளவு பணம்பெருகிவிட்டது... எப்படி பணம்? எங்கள் ஊரில்பெரும்பான்மையினர் பட்டதாரிகள் ஆசிரியர்கள்.ஊரிலும் ஊரைச்சுற்றிலும் பள்ளிகள் (தாங்கும் வசதி கொண்டஉலகத் தரபள்ளிகளும் உள்ளன), கல்லூரிகள் (கலை அறிவியல்மற்றும் போரியல்கல்லூரிகளும் உள்ளன) பல உள்ளன. பெரும்பாலானமக்கள் வெளிநாட்டிலும்வெளியூரிலும் வேலை செய்கிறார்கள். ஊரில் இருப்பவர்கள்ஆசிரியர் தொழில்,சுய வேலைவாய்ப்புகள், வள்ளியூரில் தொழில் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.சுற்றுவட்டாரத்தில் அதிக ஆசிரியர்கள்உள்ள ஊர்எங்கள் ஊர்.ஒரு ஆங்கிலவழிக் கல்விக்கூடமும்,மூன்று தமிழ்வழி அரசுஉதவி பெரும்நடுநிலைப் பள்ளிகளும்,ஒரு தமிழ்வழி அரசுஉதவி பெரும்மேனிலைப் பள்ளியும்,ஒரு அரசுஉதவி பெரும்கலை அறிவியல்கல்லூரியும், வள்ளியூருக்கும் எங்கள் ஊருக்கும் நடுவேஒரு பொறியியல்கல்லூரியும் உள்ளதுதான் அதற்கு காரணம்.

கூடங்குளம் பற்றி சிறிய முன்கதைச் சுருக்கம்:

கூடங்குளம் பற்றி தெரிந்ததும் எல்லாரும் நினைப்பது போல், எங்கள்ஊருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி எல்லாம் கிடையாது. எங்கள் ஊர்களைச் சுற்றி எப்போதுமே இந்திய அரசின் ஆபத்து தரும் திட்டங்கள் இருந்து கொண்டுதான் இருந்தன. வடக்கே இருபது கி.மீ. தொலைவில் விஜயநாராயணம் கிராமத்தில் சுமார் பத்து ஊர்களை அழித்து ஐநூறு சதுர கி.மீ. உள்ள கப்பற்படைத் தளம், மேற்கே பதினைந்து கி.மீ. தொலைவில் காவல்கிணறு பணகுடி ஊர்களுக்கு இடையில் உள்ள மகேந்தரகிரி மலையில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரோ சோதனைக்கூடம். கூடங்குளம்அணு மின்நிலையம் என்றதுமேபயத்தில் உறைந்ததுதான்நிசம். அதற்காககையெழுத்து இயக்கம் நடத்தினார்கள் எங்கள் பகுதிஆசிரியர்கள். வருடம் தொண்ணுற்று ஒன்று. அணுசக்தித் துறைக்கும்பிரதம அமைச்சருக்கும்கடிதங்களும் தந்திகளும் அனுப்பினோம். இதே நிலையில்தான் இராதாபுரம்வட்டத்தில் அனைத்து கிராம மக்களும் இருந்தார்கள்.கூடங்குளத்தில் மக்களுக்கு பலத் தடைகளை அரசுவிதித்த போதும்,நிலம் எடுக்கப்பட்டவர்களுக்குபணமும், வேலையும்தருகிறோம் என்றஉறுதிமொழி கொடுக்கப்பட்டதாலும்,எதிரே இடம்உள்ளவர்கள் கடை, தொழில் நன்றாக இருக்கும்என்று எண்ணியதாலும்வெகு சிலர்இந்த திட்டத்தால்மகிழ்ந்தவர்கள் உண்டு. ஆனால் நிலைமை வேறாய்இருந்தது. நிலம்அபகரிக்கப்பட்டவர்களுக்கு பணம் முறையாககொடுக்கவில்லை, சிலபேருக்கு மட்டும் வேலை கிடைத்தது,அதுவும் தற்காலிகவேலை. ஜப்பான்அணு உலைஉடைப்பு நிகழ்வைபார்த்ததாலும், அவ்வப்போது அதிலிருந்து நாள் முழுக்கவந்த மிகப்பெரியஇரைச்சல் சத்தம்காரணமாகவும், உலை திறக்க காலம் நெருங்கநெருங்க கூடங்குளம்வந்தால் வாழ்வுநன்றாக இருக்கும்எண்ணியவர்களும் 'திறக்கக் கூடாது' என்று ஓரிருஆண்டுகளாகவே வேறு வழி தெரியாது ஆண்டவனைவேண்ட ஆரம்பித்தார்கள்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் பற்றி:

கடந்தஇருபது ஆண்டுகள்இந்த எதிர்ப்புபோராட்டத்தில் சிறு பங்கேனும் ஆற்றிய படியால்,இதனை கவனித்துவந்து கொண்டிருக்கிறேன்.திமுக சார்பில்அப்போது திரு.வைகோ அவர்கள்பாராளுமன்றத்தில் பேசியதும், நாகர்கோவிலில் போராடிய மக்களைதுப்பாக்கிச் சூடு நடத்தி கலைத்ததும் (அதில்நான்கு பேர்உயிரிழந்துள்ளார்கள்), தொடர்ச்சியாக கையெழுத்துஇயக்கங்கள் நடத்தி அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றதும், அரசு தொடர்ச்சியாக உங்களுக்கு தெளிவுபடுத்துவோம் குறைகளை கேட்போம் என்று காலம்தாழ்த்தி வந்ததும்நான் நன்குஅறிவேன். அனைத்துசெய்துகளையும் சேகரித்து வருகிறேன். குறிப்பாக ஜப்பான்சுனாமியால் ஏற்பட்ட அணுஉலை உடைப்பினால் ஏற்பட்டஅணுக் கதிர்வீச்சுபரவும் செய்திகிடைத்ததும் மனதுக்குள் எதோ பெரிய கவலை.நம்ம ஊரிலேயேஇதே உலைஇருக்கிறதே, இதே நிலை வந்தால்என்னவாகும் என்று எண்ணும்போதே மனம் வெகுவாய்பாரமானது... ஏற்கனவே அரைகுறையாய் தெரிந்திருந்தாலும், உடனே சென்று, அணுக் கதிர்வீச்சு,அணு சக்தி,அணுக் கழிவு,அணு மின்சாரம்,அணு உலைப்பற்றி அதிகமாகசெய்திகள் சேகரிக்கஆரம்பித்தேன். செய்திகள் அனைத்தும் மனித குலத்திற்கும்இயற்கைக்கும் எதிராய் இருந்தன. ஜப்பான், ஜெர்மனிபோன்ற நாடுகள்படிப்படியாக அணு சக்தி மின்சாரத்தில் இருந்துநாட்டை விடுவிப்பதாகஅறிக்கை விட்டார்கள்.நானும் அதேபோல இந்தியஅரசிடம் இருந்துஎதிர்பார்த்தேன். நம்முடைய ஜனநாயகம் பற்றி வெகுவாய்தெரியாத காலம்:((. இங்குள்ள மக்களாட்சி சிறந்தது என்று நம்பியகாலம். அப்போதுதான் தெரிந்துகொண்டேன், இங்கேஆளும் அரசியல்வாதிகள்தொழிலதிபர்களாலும், ஊழல்களாலும், போலிஇந்திய தேசியத்தாலும்இயக்கப்படுகிறார்கள் என்று. இங்குதேசத் தியாகிகளைக்கொன்று தேசத்துரோகிகள் தான்நிரம்பியிருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டேன். இந்துத்வாஅடிவரிடிகளின் போலி இந்து தேச இராச்சியம்பற்றியும் அறிந்தபோது இந்ததேச மக்கள்எப்போது இந்தமாயையிலிருந்தும், ஆளுபவர்களிடம் இருந்தும்விடுதலை பெற்றுஉண்மையான ஜனநாயகம்பெறுவார்கள் என்று எண்ணினேன்.

அப்போதுதான்கேள்விபட்டேன், கூடங்குளத்தில் அணு உலை திறக்கக்கூடாது என்றுஇடிந்தகரை மக்கள்சாகும் வரைஉண்ணாவிரதம் இருப்பதாகவும், அதனை PMANE (அணு உலைக்குஎதிரான மக்கள்இயக்கம்) அமைப்பில்உள்ள திரு.உதயகுமார் அவர்கள்அதனை ஒருங்கிணைப்பதாகவும்.மட்டட்ட மகிழ்ச்சிஅடைந்தேன். இடிந்தகரை மக்களைப் பற்றி நான்அறிவேன். எனக்குஅவர்களுடனான தொடர்பு பிறந்ததிலிருந்தே உண்டு. அப்பாவின்நெருங்கிய நண்பர்அந்த ஊர்மண்ணின் மைந்தர்,எங்களோடு இன்றும்தொடர்பில் இருக்கிறார்.அவர்கள் குடும்பத்தைக்காண மாதம்ஒருமுறையாவது செல்வது நான் விவரம் தெரிந்தகாலத்தில் இருந்து,கல்லூரி படிக்கசென்னை வந்தகாலம் வரைதொடர்ந்தது. எங்கள் மாமா அங்கே பணிசெய்திருக்கிறார். எங்கள் அப்பா,மற்றும் என்பெயரைத் தெரியும்அளவுக்கு எங்கள்தொடர்பு உண்டு.

இடிந்தகரை மக்களைப் பற்றி:

மக்களின்பூர்வீகம் தெரியும்.வாழ்க்கை முறைதெரியும். கடினஉடம்புக் காரர்கள்.எவ்வளவு கணமானமீனானாலும் ஒருவராகவே தூக்கி விடுவார்கள். கணத்தபடகை நான்குபேர் சேர்ந்துகடலில் தள்ளிசெல்வார்கள். இந்த மீனை பிடிக்க வேண்டும்,இந்த மீன்நல்ல மீன்குறைவாக உள்ளமீன் அதனைகடலில் விட்டிவிடவேண்டும் செய்யும்தொழில் அறம்போற்றுபவர்கள். பணம் வரும் போதும் நகைவாங்கி செழிப்பாய்இருப்பார்கள், மீன் கிடைக்காத நேரத்தில் ஒரேநாளில் நகைகளைவிற்றுவிடுவார்கள். அவர்களுக்கென்று பெரிதாகசேமிப்போ, தேவையற்றபண, நுகர்வுப்பழக்கமோ கிடையாது.ஊரில் அனைவரும்ஒற்றுமையாக இருப்பார்கள். எந்த நிகழ்வென்றாலும் ஒரேஇடத்தில் கூடிசமைத்து சாப்பிடுவார்கள்.மகிழ்வு கவலைகளைபகிர்ந்து கொள்வார்கள்.அவர்கள் நம்இனப் பூர்வக்குடிகளின் கூட்டுவாழ்க்கையை இன்றும் வாழ்த்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை.கோவில், பக்தி,இறை பணியாளர்(பாதிரியார்) என்றால் அவ்வளவு மதிப்பு வைத்திருப்பார்கள்.அவர்கள் இறைநம்பிக்கை அப்படிஇருக்கும். அசைக்க முடியாதது. அவர்களின் கிறித்தவநம்பிக்கை ஐநூறுஆண்டுகள் பழமையானது.புனித சவேரியாரால்(கோவா) கிரித்துவைப்பற்றி அறிந்தவர்கள்,கிறித்துவை வழிபட ஆரம்பித்து சுமார் ஐநூறுஆண்டுகள் இருக்கும்.ஆலயம் அமைத்துசமைய இயக்கம்(கத்தோலிக்க கிறித்தவ மத பாதிரியார் கொண்டகோவில் வழிபாடு)ஆரம்பித்து முன்னூறு ஆண்டுகள் இருக்கும்.

இறைநம்பிக்கை தன்வாழ்வுரிமையை பாதிக்காத வரைதான், வாழ்வுரிமை பாதிக்கப்படும்போதுஎன்னுடைய இறைநம்பிக்கையை அசைக்கவும் என்னால் முடியும் என்றுஎண்ணுவது பொதுவாகதெற்கத்தி மக்கள்அனைவருக்கும் உள்ள குணம். அறுபது ஆண்டுகள்முன்பு ஊரில்ஏற்பட்டு கோவில்பிரச்சினையில் இருபது குடும்பங்கள் கிறித்தவத்தில் இருந்துஇந்து மதத்திற்குமாறியுள்ளது குறிப்பிடத் தக்கது. மாதாக் கோவிலுக்குஎதிரிலேயே ஒருகோவில் அவர்களுக்காககட்டியுள்ளார்கள். அந்த கோவிலைஇறை உயர்த்துவதாகவும்,கிறித்தவர்கள் கூட கூட்டே வைக்கக் கூடாதுஎன்று சொல்லியும்சென்ற இந்துத்வாஇந்து முன்னணிகூட்டத்தை ஓடஓட துரத்தியுள்ளார்கள்.அன்று முதல்இன்று வரைஅவர்களுக்குள் எந்த பிணக்கும் வந்ததில்லை. தங்களுக்குள்திருமணம் செய்துகொள்கிறார்கள். பெண் எடுப்பவர் மதம் மாறிக்கொள்கிறார்களாம். அவர்களுக்கு தெரிகிறது என் ஆன்மிகம்வேறு என்சொந்தங்கள் வேறு என்று. அவர்களுக்கு தெரிகிறதுஇந்த மண்ணில்ஒன்றாய் பிறந்தஅண்ணன் தம்பிஅக்காள் தங்கைமதத்தினால் அன்னியமாகப் போவதில்லை என்று... அதனால்இது எளிதாய்சாத்தியப்படுகிறது. மதத்தையும் சாதியத்தையும்உயர்த்திப் பிடித்து நம் ஊரில் உள்ளநம் சொந்தங்களையேவேறாக பார்ப்பது,அரசியல் செய்வதுஎத்துணை அபத்தம்என்று தமிழன்ஒவ்வொருவனும் இவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தினை ஒடுக்குதல்:

எட்டுமாதங்களாக அறவழியில்போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் - இடிந்தகரைமக்களை பல்வேறுவழிகளில் இந்தியஅரசு ஒடுக்கிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது.

மக்களின்அச்சத்தைப் போக்க நிபுணர் குழு அமைத்துமக்களின் அச்சத்தைபோக்குவோம் - இந்திய அரசு

மக்களின்அச்சத்தை போக்குவோம்,மக்களுக்கான போராட்டத்தில் மக்களின் பக்கம் இருப்பேன்- தமிழ் நாட்டுமுதலமைச்சர் ஜெ

பேச்சுவார்த்தைநடத்தப்படும் - இந்திய தமிழக அரசு

நிபுணர்குழு மக்களைசந்திக்காமலேயே அவர்களின் வினாக்களுக்கு விட அளிக்காமலேயேபாதுகாப்பானது என்ற உறுதி மொழி கொடுத்தது.

கல்வியில்ராக்கெட் பொறியாளரும்,அணு குண்டுசோதனையின் தலைவரும்,முன்னாள் குடியரசுத்தலைவருமாக்கியஅப்துல் கலாமமக்களை சந்தித்துப்பேசுவேன், பாதுகாப்பைஆய்வு செய்வேன்என்று கூறிவிட்டு,வெறும் அரைமணிநேரம் ஆய்வில்பாதுகாப்பு ரொம்ப நல்லாயிருக்கு, அணு சக்தியைவைத்துதான் இந்திய வல்லரசு என்று சான்றுபகிர்ந்தது.

போராட்டக்காரகளின்ஒருங்கினைப்பாளர்களை தேச நலனுக்குஎதிராக வேலைசெய்யும் தேசத்துரோகிகள், அமெரிக்க கைக் கூலி என்றுஅமெரிக்காவுடம் அணு உலை ஒப்பந்தம் போட்டுக்கொண்டேபரப்பிவிட்டது.

மதப்பிரச்சினையாகவும் சாதிப் பிரச்சினையாகவும் திசை திருப்பிவிடமுயற்சித்தது.

தேவையற்றமின்தட்டுப்பாட்டை வேன்றுமென்றே மக்களுக்குதிணித்து கூடங்குளம்வந்தால் மின்தட்டுப்பாடுதீரும் என்றமாயையை ஏற்படுத்தியது.

வெறும்பதினைந்து சதவிகிதம்மட்டும் தமிழகத்திற்குதரப்படும் தமிழ்நாட்டில் உள்ளநெய்வேலி மின்சாரத்தைஅதிகமாக கேட்காமல்தமிழக அரசுகூடங்குளத்தில் இருந்து நூறு சதவிகதமும், கோமாளிஅரசியவாதி நாராயணசாமிஐம்பது சதவிகிதம்அறுபது சதவிகதம்ஆயிரம் மெகாவாட்என்று கட்டுக்கதைகளைஅள்ளிவிடுவதுமாக நடந்த நாடகங்கள்.

கடைசிகட்ட பேச்சுவார்த்தைஎன்று திருநெல்வேலிஆட்சியர் அலுவலகத்தில்வைத்து இந்துமுன்னணியினரை வைத்து போராட்டக்காரகளை அடித்து வெளியேற்றியது.

போராட்டஒருங்கிணைப்பு குழுவுடன் தனியாக பேசுவோம் என்றுஒன்பது பேரைக்கைது செய்தது...

இடைதேர்தல்முடிந்ததும் மக்கள் போராட்டம் என்று சொன்னநாக்கு திடீரென144 தடை உத்தரவைஇராதாபுரம் வட்டத்திலுள்ள மக்களுக்கு போட்டு, இடிந்தகரைமக்களை துரத்தியாவதுஅணு உலையைதிறக்க இந்தியஅரசிற்கு ஆதரவுஅளிக்கும் என்றுசொன்னது.

சொன்னதுபோல, கூடங்குளத்தில்அணு உலையைச்சுற்றி இருந்தமக்களை துரத்திஅடித்திவிட்டு தடை உத்தரவைப் போட்டு , இடிந்தகரையைசுமார் பதினைந்தாயிரம்போலீசார் கொண்டுசுற்றிவளைத்து, அத்தியாவிசிய தேவைகளான தண்ணீர், பால்,உணவுக் கொண்டுபோகாமல்தடுத்து, போராட்டக்காரர்களையும்ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்கள் திரு.உதயகுமார்,திரு.புஷ்பராயன்,திரு.மைபாஆகியோர்களையும் சரணடையச் செய்ய பயமுரித்தியது.

சொந்ததேசத்திலேயே அகதிகளாக சுமார் இரு வாரங்களாகஅத்தியாவசிய தேவைகள் இன்றி உணவு இன்றிவாடியது நம்இனம். கடல்வழியாகவும்,காட்டு வழியாகவும்உணவைக் கொடுக்கஓடோடிச் சென்றார்கள்நம் சொந்தங்கள்.சுமார் பத்தாயிரம்மக்கள் சுற்றியுள்ளகிராமங்களில் இருந்து குவிந்தார்கள். அவர்கள் மேல்அரசிற்கு எதிராகபோர் புரிந்ததாகதேசத் துரோகவழக்குகள் போடப்பட்டது.

தடைஉத்தரவை நீக்கக்கோரி போரிட்ட(?)கூட்டப்புளியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், வாலிபர்கள்,பெரியவர்கள் என இருநூறு பேரை கைதுசெய்தது.

தடைஉத்தரவை நீக்கக்கோரி இடிந்தகரைநோக்கி திருநெல்வேலியில்இருந்து புறப்பட்டதமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்து வந்தஇயக்கம் சார்ந்தமக்களை கைதுசெய்தது.

நக்சலைட்டுகள்என்று அதில்இருந்த சதீஷ்என்ற வாலிபர்மற்றும் இன்னும்இருபரை எந்ததகவலும் இன்றிகைது செய்துஇன்னமும் விடுதலைசெய்யாமல் இருப்பது.இன்னமும் ஐம்பதுநபர்கள் சிறையில்உள்ளார்கள். இவர்கள் என்ன தவறு செய்துவிட்டார்கள்?எங்களுக்கும் எங்கள் அடுத்த தலைமுறைக்கும் இயற்கைக்கும்ஊரு விளைவிக்கப்போகும் அணுஉலை எங்கள்நிலத்தில் வேண்டாம்என்று கேட்டதைத்தவிர என்னதவறு செய்தார்கள்?எங்கள் அச்சத்தைபோக்கிவிட்டு எங்கள் மண்ணை புண்ணாக்குங்கள் என்றுஅறவழியில் போராடியதைத்தவிர இந்தலஞ்சத்தில் வாழும் அரசியல்வாதிகள் ஆளும் இந்தஅரசிற்கு எதிராகஎன்ன செய்தார்கள்?

இவ்வளவுகபட நாடங்கங்கள்அரங்கேறிவிட்டன இந்த அரசால் இந்த எட்டுமாதத்தில். பல்வேறு வழிகளில் சேவ் தமிழ்சுஇயக்கத்துடன் இணைந்து போராடியும் இணையும் மூலமாகஎதிர்ப்பு தெரிவித்தும்வந்த எனக்குஇந்த சதிகளும்அரசின் ஜனநாயகமறுப்பு செயலும்மிகவும் வருத்தத்தைதந்தன. அணுஉலையை திறக்கசெய்ய நடந்தஒடுக்கு முறைகளும்,இந்த கைதுநடவடிக்கைகளும் இடி விழுந்தது போல ஆக்கியது...அவர்கள் சொந்தநாட்டிலேயே அடிமைகளாய் தண்ணீரும் உணவும், குழந்தைகளுக்குபாலும் மறுக்கப்பட்டசெய்தி கேட்டபோதுஉள்ளம் பதறியது.தங்களின் வாழ்வாதாரத்திற்காகபோராடியது தவறா?தங்கள் அடுத்ததலைமுறைக்காக போராடியது தவறா? இயற்கையையும் இந்தமண்ணையும் காக்கஅன்றி என்னபிழை செய்துவிட்டார்கள்இந்த முள்ளிவாக்கால்இனப்படுகொலைக்கொத்த அடுக்குமுறை?

 ஒருவழியாகஇருவாரங்கள் கழித்து இராதபுரத்தில் நடந்த அரசின்பிரிதிநிதிகளின் கூட்டத்தில் அவர்களைச் சுற்றி இருந்தபோலிசால் போடப்பட்டதடை உத்தரவைநீக்குவதாகவும், கைது செய்தவர்களை பிணையில் விடுவிக்கப்போவதாகவும் வந்த செய்தி கேட்டு மனதில்சிறு ஆறுதல்.ஆனாலும் ஈஸ்டர்பண்டிகைக்கு செல்ல திட்டமிட்ட எனக்கு, ஏனோபொதுவாக ஊருக்குபோகும் போதுள்ளமன மகிழ்ச்சிஇல்லை... அதற்குகாரணம் இடிந்தகரைமக்களின் போராட்டத்தின்மீது அரசின்அலட்சியமும் அவர்கள் மேல் கட்டவிழ்க்கப்பட்ட அடுக்குமுறையும் தான்... கடந்த டிசெம்பர்மாதம் முதலேஅவர்களை நேரில்கண்டு என்ஆதரவை தெரிவிக்கநினைத்த எனக்குஏனோ வாய்ப்புகிடைக்காமலே போனது. அது ஸ்டாலின் அண்ணாவிற்கும்தெரியும். அண்ணனிடம்இதனைப் பற்றிபேசினேன், இருவரும்அதே நிலையில்தான் இருந்ததுபுரிந்தது. வெள்ளியா சனியா என்று யோசிக்கையில்,கிறித்து மக்களுக்குஆன்மீக விடுதலைக்காகசிலுவையில் மரித்து அந்த துக்கத் தினமானபுனித வெள்ளிஅன்று போகதீர்மானித்தோம்.

இடிந்தகரை நோக்கிய பயணம்:

அன்றுகாலையில் தான்ஸ்டாலின் அண்ணாஅவரது ஊருக்குவந்து சேர்ந்திருந்தார்.நான் முந்தினநாளே வந்திருந்தேன்.காலையிலேயே அவருக்கு தொலைப்பேசியில் அழைத்தேன். எப்போதுசெல்லலாம் என்றுகேட்ட எனக்குஅவரிடம் இருந்துஒரு துயரச்செய்தி காத்திருந்தது, "அம்மாவிற்கு சிறிது உடம்புசரியில்லை, ஒன்றும் பயப்படத் தேவையில்லை, திட்டமிட்டபடிஇன்று செல்கிறோம்,மதியம் செல்லலாம்,முடியாத பட்சத்தில்நாளைச் செல்லலாம்"என்றார். எனக்குமனதில் ஒரேகவலையும் குழுப்பமும்.செய்வதறியாது இருந்தேன். வீட்டில் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.அப்பா எளிமையானவர்,ஆசிரியர் வேலையில்இருந்து ஓய்வுபெற்றதும் ஊரில்சிலச் சேவைப்பணிகளை செய்துவருகிறார், மக்கள் போராட்டம் என்றேன் ஒருமுறை,வருத்தம் தெரிவித்தார்அவ்வளவே, அதற்குமேல் பெரியஆர்வம் காட்டவில்லை.கொஞ்சம் வருத்தம்உண்டு எனக்கு.திறக்க ஆதரவுஎன்று தமிழகஅரசு அறிவித்ததும்உதயகுமார் அவர்கள்மிகவும் தளர்ந்துகவலை அடைந்துவிட்டதாக கூறினார்,கோபத்தில் கத்தினேன்,ஏன் உங்களுக்குகவலை இல்லையாஎன்று... அதன்பிறகு இன்றுகூடங்குளம், இடிந்தகரை அண்ணனுடன் செல்லப் போகிறேன்என்றதும், நானும்வருகிறேன் என்றார்.ஒருபுறம் அவருக்குதெரிந்த ஊர்,போராட்ட மக்களைப்பார்க்க வேண்டும்என்ற ஆவல்,மறுபுறம் எங்கேபோலிஸ் மறித்துமகனையும் நண்பரையும்விசாரித்து அல்லது கைது செய்யக் கூடும்என்ற பயமும்இருந்திருக்கக் கூடும் என்ற அனுமானம் உண்டுஎனக்கு :)).

சுமார்ஒருமணிக்கு அழைப்பு வந்தது, "தம்பி சரியாகஇன்னும் ஒருமணிநேரத்தில் கிளம்புகிறேன். நீ பக்கமாக வந்தால்எனக்கும் உதவியாகஇருக்கும், எனக்கு வழி தெரியாது", நானும்"(உள்ளுக்குள் உற்சாகம் வந்தவனாய்)அண்ணே, நீங்கள்பள்ளியாடியில் இருந்து நாகர்கோவில் வந்து அங்கிருந்துபேருந்தில் கூடங்குளம் வந்துவிடுங்கள்,நான் இருசக்கரவாகனத்தில் வருகிறேன்" என்றேன். "உனக்கு அங்கு யாரவது தெரியுமா?" என்றார்,நான் "ஊரே தெரியும் கவலைப் படாதீர்கள்,எங்கள் அப்பாவருகிறார்" என்றேன். அவர்க்கு மனிதில் குழப்பமும்மகிழ்ச்சியும்.ஊர் எல்லை
 
நான்கூடங்குளத்தில் கீழ பஜார் பேருந்து நிறுத்தத்தில்வாகனத்தை நிறுத்திஒரு பேருந்துபோய் அடுத்தபேருந்தில் அண்ணன் வந்து இறங்கினார். அப்பாவின்அறிமுகம் முடிந்து,அங்குள்ள ஒருகடையில் குளிர்பானம்குடித்தோம். அப்படியே அந்த நபரிடம் பேச்சுக்கொடுத்தோம். பதினைந்து இருபது நாட்கள் கழித்துஇப்போதுதான் கடைகள் திறப்பதாகவும், கூடங்குளம் மக்கள்அனைவரும் அணுஉலை எதிர்ப்பில்தீர்க்கமாகவும் இருப்பதாகக் கூறியது எங்களுக்கு வியப்பைத்தந்தது. இதுவரைநமக்கு வந்தபத்திரிக்கைச் செய்திகளும் அரசும் இந்துக்களைச் சமமாகப்பார்க்காத இந்துமுன்னணியினரும் சொல்லுவது இது கிறித்தவர்கள் போராட்டம்என்றும், மீனவர்கள்போராட்டம் என்றும்தானே... இவர்கள்அந்த இருப்பிரிவைச் சார்ந்தவர்கள்அல்லவே... நாங்கள்கூறினோம் நாங்களும்எதிர்ப்பு தெரிவித்துசென்னையில் போராடினோம் என்றதும் என்றதும் அவர்களுக்குஅப்படி ஒருமகிழ்ச்சி, சகோதரப் பாசம். போய் சொல்லுங்கதம்பிகளா, எங்ககஷ்டங்களை இந்தஉலகம் அறியட்டும்என்றார்கள். நிலங்களை பிடுங்கி பணம், வேலைதருவதாக அபகரித்தது,தகவல் ஏதுமின்றிநடுஇரவில் வீட்டத்தட்டியும்உடைத்தும் மக்களைக்கைது செய்தது,மணிக்கணக்கான நாட்கணக்கான இரைச்சல் தரும் பரிசோதனைகள்,அச்சங்கள், பீதிகள், அக்கறைகள் என உண்மையானதேசப்பற்றுள்ள, தேச நலனில் அக்கறை உள்ளமக்களின் பேச்சைக்கேட்கும்போது மக்களுக்கெதிரான இந்த அரசின் ஜனநாயமற்றசெயல்களை எண்ணிவருத்தமுற்றேன்.
 
இடிந்தகரை ஊரின் வாசல்
 
அடித்து நொருக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கொடிகள்
 

டிரக்கர்என்னும் சிறியஜீப் வகைவாகனத்தில் நானும் அண்ணனும் கூடங்குளத்தில் இருந்துஇடிந்தகரை கிளம்ப,அப்பா இருசக்கர வாகனத்தில்பின் தொடர்ந்தார்கள்.வைராவிக்கிணறு என்ற கிராமம் தாண்டி இடிந்தகரைநோக்கி டிரக்கர்சென்று கொண்டிருந்தது.வழியெங்கும் போலிஸ் நின்ற தடங்களும், அவர்களைத்தடுக்க மக்கள்போட்ட தடுப்பணைகளும்பார்க்க முடிந்தது.சுனாமி நகர்தாண்டி இடிந்தகரைபேருந்து நிலையத்தில்இருந்கினோம். அதற்குள் அப்பா வழியில் பார்த்ததங்கள் நண்பரின்உறவினரோடு வந்துசேர்ந்திருந்தார். நால்வருமாக அங்குள்ளமக்களிடம் தற்போதுஉதயகுமார் என்கிருப்பதாகவிசாரித்தோம், அண்ணனின் கட்டையாக முடி வெட்டியதலையையும் கருக்கானமீசையையும் பார்த்து போலிஸ் என்று நினைத்திருக்கக்கூடும். அந்தநண்பரின் உறவினர்நம்மைப் பற்றிசொல்லவே, இறைபணியாளர்கள் தாங்கும் விடுதியில் தங்க வைத்துள்ளார்கள்போய் பாருங்கள்என்றார்கள். போய் கேட்டோம், சிறிய காத்திருப்புக்குப்பின்சென்னையில் இருந்து வந்திருக்கிறோம் என்றதும், சிறிதுதூரம் கடற்கரைஅருகாமையில் சென்னையில் இருந்து வந்த சிலநபர்களுடன் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்லிகிழக்கு நோக்கிசெல்லச் சொன்னார்கள்.

சந்திப்பு, போராட்ட மக்களுடன் உரையாடல்:

போராட்டக்குழுவின் புகைப்புடன் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் போர்ட் நம்மை ஊருக்குள் வரவேற்கிறது.
 
அந்தவிடியாத கிழக்குதிசை நோக்கிநடந்து சென்றுஅங்கே உரையாடிக்கொண்டிருந்ததோழர்களையும் அயராத உழைப்பிலும் மக்கட் பணியிலும்உற்சாகமாய் ஒரு ஒளிவட்டத்துடன் இருந்து பேசிக்கொண்டிருந்தவரலாற்று நாயகன்,தமிழர்களின் எதிர்காலத் தலைமுறைகளுக்கானப்போராட்டத்தின் உருங்கிணைப்பாளர் திரு.உதயக்குமார் அவர்களையும்,தோழர் புஸ்பராயனையும்புனித வெள்ளிதினத்தில் மாலையில்சுமார் ஐந்துமணி அளவில்சந்தித்தோம். நல்ல உபசரிக்கும் அன்பு காட்டும்சாந்த முகம்திரு.உதயக்குமார்அவர்களுக்கு. அவருக்கு மட்டுமல்ல அங்குள்ள மக்கள்அனைவருக்கும். பேச ஆரம்பித்தோம். அப்பா என்னகோரிக்கைகளை தற்போது வைத்துள்ளீர்கள் என்று கேட்டுதெரிந்து கொண்டார்.
 

போராட்டக்குழு பந்தல் அமைத்துள்ள ஆலய முகப்புத் தோற்றம்.


அரசியல்,போராட்டங்கள், கடல் சார் அமைப்பு, சட்டம்,சுனாமியின் போது இடிந்தகரை, மக்களின் உணவுப்பழக்கம், மீன்வகைகளின் சுவைகள்,ஆமையின் சத்து,அவர்கள் பிடித்தமுயலின் வைத்திலிருந்தகுட்டிகளுடன் விளையாட்டு, அணில், சென்னை மக்கள்திரும்பியபோது கொடுத்த நன்கொடைகள், அங்கு திருத்தலத்தைதரிசப்பதர்காக தங்கியுள்ள வெளியூர் மக்களிடம் வாங்கும்வெறும் பத்துரூபாய் மாதவாடகை, இடிந்தகரைமக்களின் காப்பாற்றும்குணம், அண்ணாஹாசரே குழுவில்இருந்த நபரின்வருகையும் தினமலரின்செய்தியும், ஜெமோ அவர்களின் ஆதரவு, நாகர்கோவில்பள்ளியின் நிலை,இந்து முன்னணியின்நாடகம், போலிசின்அரஜாகம், போலிஸ்ஒடுக்குமுறையின் போது உணவை கொண்டுவர பக்கத்துகிராம மக்கள்செய்த பொற்காலநடவடிக்கைகள், கடல்வழி மக்கள் வருகையும் உதவியும்,மருத்துவ வசதிஅற்ற நிலை,ஊடகவிலாளர்களின் நிலை, ஒன்றிணைத்து உணவு சமைத்துஇராண்டாயிரம் மக்களுக்கு மேல் இன்றளவும் சாப்பிடுவது,குடும்பம் குடும்பமாகஇருக்கும் தொடர்உண்ணாவிரதம், அரசின் பாராமுகம், மின்சாரம் கிடைக்கஇன்னம் ஆறுமாதம் ஆகும்சூழலில் கூடங்குளம்திறந்தால் தமிழ்நாடேஒளிவெள்ளத்தில் மிளிரும் ஒளிரும் என்ற பொய்பிரச்சாரம், போராட்டக்குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்,கைது செய்தவர்களைமீட்கக் கோரிக்கை,ஐநூறு கோடிதரும் அரசின்மோசடி, ஊர்த்தலைவர்களின்நிலை, இவ்வளவுநாள் ஆதரவுதராதவர்கள் பாதிப்பு எங்களுக்கும் என்றும் பணத்தைகூறு போடாவந்தது, தமிழகபாஜக தலைவர்இவ்வளவு நாள்பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டு கன்னியாகுமரி மாவட்டமும்பாதிக்கப்படும் அதற்கும் பணம் தாருங்கள் என்றுபேசியது, கட்சிகளின்நிலைப்பாடு, இயக்கங்களின் ஆதரவு, அனைத்து தரப்புமக்களின் ஆதரவு,பார்வை, முகநூலிலும்இணையத்திலும் உளவுத் துறையின் ஊடுருவும் செயல்கள்என அனைத்தையும்பேசினோம்... இரவு எட்டு மணி மேல்ஆனதும் கிளம்பும்நேரம் வந்ததைஉணர்ந்தோம். கிளம்ப மனமில்லை. இடிந்தகரை சுமார்ஐம்பது ஆண்டுகளுக்குமுன்னால் மதமாறியகுடும்பத்தைச் சார்ந்த ராமு அண்ணன் அவர்கள்எங்களுக்கு காபி வழங்கி எங்களைக் கவனித்துக்கொண்டார். அவரின்கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அன்போடு உபசரித்தார்,தங்கிச் செல்லவேண்டும் என்றுசகோதரப் பாசத்தோடுசொன்னார், நாங்கள்கிளம்புவதாகச் சொல்லி ஒரு கணத்த மனத்துடன்கிளம்பினோம். இடிந்தகரையில் இருந்து மீண்டும் ஒருஆட்டோ மூலம்கூடங்குளம் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு,ஸ்டாலின் அண்ணனைகூடங்குளத்தில் இருந்து பேருந்தில் நாகர்கோவில் நோக்கிஅனுப்பிவிட்டு அப்பாவும் நானும் ஊர் நோக்கிஇரவு ஒன்போதுமணிவாக்கில் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினோம்.இன்னமும் ஏனோஇடிந்தகரையில் இருப்பதாகவே உணர்வு.

தோழர் உதயகுமார், தோழர் புஸ்பராயனுடன் நான், ஸ்டாலின் பெலிக்ஸ் அண்ணா, அப்பா.
 
தோழர் புஸ்பராயனுடன்.
வேறு இயக்கத் தோழர்களுடன் உதயகுமார், புஸ்பராயன்.
 
ராமு அண்ணாவுடன்.
 
நில ஒளியில் நாயகன்.
 
 மனதில்அவர்களை இவ்வளவுநாள் சந்திக்கவில்லையே,ஒருவழியாக இப்போதுசந்தித்துவிட்டோம் என்ற பாரம்குறைந்தாலும், தேசத்தின் மீதான பற்றும் இனமக்கள் மீதானபொறுப்பும் அதிகமாகி, சமூக அக்கறையுடன் இன்னும்அதிகமாய் இந்தமானுடத்திற்கு எதிரான இயற்கைக்கு எதிரான நம்மண்ணிற்கு எதிரானநம் வருங்காலசந்ததிகளுக்கு எதிரான இந்த அணு உலையைஎதிர்த்து போராடவேண்டும் என்றபாரம் அழுத்தியது.

இந்த போராட்டத்தில் நான் உணர்ந்து கொண்டது:

விடைபெற கிளம்பும் போது...
 
இது தொடக்கமே முடிவல்ல, இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமாய் உள்ளது...

இது தோல்வியல்ல, மனித குலத்தின் விடுதலையே வெற்றி இலக்கு...

இது ஜனநாயகம் அல்ல, ஜனநாயக அரசு என்பது மக்களால் மக்களுக்கான அரசு என்றால் மக்களுக்கெதிராக இருக்க முடியாது.
 
இது மானுடத்திற்கெதிரான தொழில்நுட்பம், முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும், வேறு வழியில் மின்சாரம் பெற முடியும்...

இது மக்களுக்கு உணர்த்துவது, கொஞ்சம் பொதுநலத்தோடு அடுத்ததலைமுறையின் இனிய வாழ்வைக் கருத்தில் கொண்டு உங்கள் சுயநலத்தை வீழ்த்துங்கள்.
 
இதோ கூடங்குளம் இடிந்தகரையில் இருந்து, நாம் இடிந்து வீழ்ந்து விழாமல், கிழக்கில் இருந்து விடிந்து எழ புறப்பட்டு விட்டார்கள் உங்கள் சகோதரர்கள்.... நீங்கள்???

கருத்துகள் இல்லை: